இனி ஊதியக்குழுவே கிடையாது, ஊதிய உயர்வுக்கு புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு மாஸ் அறிவிப்பு

8th Pay Commission: 8வது ஊதியக்குழு வருமா, வராதா? அரசு சார்பில் கூறப்படுவது என்ன? மாற்று அமைப்பை கொண்டு வருகிறதா அரசு?

8th Pay Commission: ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அக்ரோயிட் ஃபார்முலா (Aykroyd Formula) கருத்தில் கொள்ளப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய சூத்திரம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் (Fitment Factor) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றப்படுகிறது. ஆனால் இப்போது அடிப்படை சம்பளத்தில் எந்த உயர்வும் செய்யப்படுவதில்லை.

1 /11

வரும் பட்ஜெட்டில் மத்திய அரசு 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பை வெளியிடும் என மத்திய அசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால் அரசு சார்பில் இது குறித்து இன்னும் எந்த தீர்மானமான பதிலும் வரவில்லை.

2 /11

இப்போது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிர்ணயிக்க உதவும் 7வது ஊதியக் குழு இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும். அதன் பிறகு ஊதிய கணக்கீடுகளை செய்ய, அடுத்த ஊதியக்குழு தேவை.

3 /11

எனினும், இனி ஊதியக்குழுக்களே அமைக்கப்படாது என்றும், ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிக்க அரசாங்கத்தால் ஒரு புதிய சூத்திரம் கொண்டு வரப்படும் என்றும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். இனி புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படாதா? அரசு ஊழியர்களின் ஊதியம் எப்படி தீர்மானிக்கப்படும்? புதிய முறை அமலுக்கு வருகிறதா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /11

அடிப்படை ஊதியம்: 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 7வது சம்பளக் குழுவில், சம்பள உயர்வு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் (Fitment Factor) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இப்போது ஒரு புதிய சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் கீழ் மத்திய ஊழியர்களின் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 /11

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாற்றப்பட்டலாம். அப்போது, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ.18,000, ரூ.51,480 ஆக அதிகரிக்கும். தற்போது ரூ.9,000 ஆக உள்ள ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். ஆனால், இதுவரை அரசு தரப்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

6 /11

 ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அக்ரோயிட் ஃபார்முலா (Aykroyd Formula) கருத்தில் கொள்ளப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புதிய சூத்திரம் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் (Fitment Factor) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றப்படுகிறது. ஆனால் இப்போது அடிப்படை சம்பளத்தில் எந்த உயர்வும் செய்யப்படுவதில்லை.

7 /11

புதிய முறையின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இனி சம்பள உயர்வு தீர்மானிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. இதன் மூலம் ஊழியர்களின் செயல்திறனில் வேகமான முன்னேற்றம் ஏற்படும் என அரசு நம்புகிறது. Aykryod Formula -இன் கீழ், தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களைப் போலவே மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வும் தீர்மானிக்கப்படும். அனைத்து வகை ஊழியர்களும் சமமான சலுகைகளைப் பெறும் வகையில் சமத்துவத்தை கொண்டு வருவதே இந்த சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் பின்னணியில் உள்ள அரசாங்கத்தின் நோக்கமாகும்.

8 /11

எனினும், இது குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. தற்போது, ​​கிரேடு-பே (Grade Pay) விதிகளின் படி அனைத்து பிரிவுகளின் சம்பளத்திலும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஆனால், புதிய சூத்திரம் வந்த பிறகு, இந்த இடைவெளியை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.

9 /11

7வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில், சம்பளக் குழுவைத் தவிர, ஊழியர்களின் சம்பள திருத்தத்திற்கு ஏதேனும் புதிய தீர்வு குறித்து சிந்திக்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர்கள் கூறியதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, சம்பள அமைப்பை ஒரு புதிய சூத்திரத்திற்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக கருதப்படுகின்றது. இதனால், 10 ஆண்டு என்ற பெரிய இடைவெளி இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு இருக்கும்.

10 /11

புதிய ஃபார்முலா அமலுக்கு வந்த பிறகு ஊதியம் உயர்த்தப்படும் அளவு அதிகரிக்கலாம். அரசுத் துறைகளில் தற்போது 14 பே கிரேடுகள் (Pay Grade) உள்ளன. ஊழியர் முதல் அதிகாரி வரை அனைவரும் அனைத்து பே கிரேடுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது சம்பளத்தில் பெரிய வித்தியாசம் உள்ளது. புதிய ஃபார்முலா மூலம் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் சமமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு, அகவிலைப்படி அரியர் தொகை அல்லது புதிய ஊதிய திருத்த முறைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.