Budget 2025: 5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் EPFO முக்கிய அறிவிப்பு

Union Budget 2025: ஓய்வூதியதாரர்கள் குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 15, 2025, 09:22 AM IST
  • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழிலாளர் அமைப்புகள் சந்திப்பு.
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்குமா?
  • ஓய்வூதியம் அதிகரித்தால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
Budget 2025: 5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் EPFO முக்கிய அறிவிப்பு title=

Union Budget 2025: ஓய்வூதியதாரர்கள் குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Body:

Union Budget 2025: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செயப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 அம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார். பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களும் பல வித எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். இதில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO உறுப்பினர்களுக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

Budget 2025 Expectations

இபிஎஃப்ஓ செயல்முறையில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சமீபத்தில் இபிஎஃப்ஓ அதன் செயல்பாடுகளில் பல மேம்படுத்தல்களையும், மாற்றங்களையும் அறிவித்தது. EPFO 3.0 -இன் கீழ் நவீனமயமாக்கப்படும் இபிஎஃப்ஓ, இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) வசதிக்காக பல புதிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றில் சில ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில், சில இனி வரும் நாட்களிலும், மாதங்களிலும் அறிமுகம் செய்யபப்டவுள்ளன. இவற்றை தவிர, பட்ஜெட்டிலும் சில நல்ல செய்திகள் காத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

EPF Subscribers:இபிஎஃப் சந்தாதாரர்களின் மாத ஓய்வூதியத்தில் ஏற்றம்

இபிஎஃப் ​​சந்தாதாரர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக அரசு அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஓய்வூதியதாரர்கள் (Pensioners) குழு சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார். 

Nirmala Sitharaman: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். இது தொடர்பாக, EPS-95 தேசிய போராட்டக் குழு ஜனவரி 10 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது. இதற்கு முன்பு, தொழிலாளர் அமைப்புகளும் நிதி அமைச்சருடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தன. EPFO-வின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரிக்கவும், எட்டாவது சம்பளக் குழுவை உடனடியாக அமைக்கவும், பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரிகளை விதிக்கவும் தொழிலாளர் அமைப்புகள் நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் EPS-95 தேசிய போராட்டக் குழு, ரூ.5,000 ஓய்வூதியம் போதுமானதல்ல என்றும், இதனால் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது என்றும் கூறியது. அரசாங்கம் தற்போது அளிக்கும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பல ஓய்வூதியதாரர்கள் இன்னும் இதை விட குறைவான ஓய்வூதியத்தைப் பெறுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்

2014 முதல், மத்திய அரசு இபிஎஸ்-95 ஓய்வூதிய நிதியின் கீழ் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 1000 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை மாதம் 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு விரைவில் அரசு ஒரு தீர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

EPF Members: ஓய்வூதியம் அதிகரித்தால் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

ஓய்வூதியம் அதிகரிப்பதால், ஓய்வூதியதாரர்கள் தங்கள் செலவுகளை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு கிடைக்கும். மேலும், இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களிடையே ஓய்வூதிய பலன்களில் உள்ள இடைவெளி குறையும்.

மேலும் படிக்க | இனி ஊதியக்குழுவே கிடையாது, ஊதிய உயர்வுக்கு புதிய சூத்திரம்: அரசு ஊழியர்களுக்கு மாஸ் அறிவிப்பு

மேலும் படிக்க | PPF முதலீடு... ரூ.48,000 பென்ஷன் பெற உதவும் 15+5+5 ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News