பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016 ஜனவரியில் 7வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தியது. 7வது சம்பள கமிஷனுக்கு முன்பு, 4வது, 5வது மற்றும் 6வது சம்பள கமிஷன்கள் ஒவ்வொன்றும் 10 ஆண்டு கால இடைவெளியில் அமைக்கப்பட்ட நிலையில், 7வது ஊதிய குழுவின் காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, அரசு ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் 8வது சம்பள கமிஷனை அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பின்னடைவு
இருப்பினும், சம்பள கமிஷனின் ஆண்டுக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு காலம் அல்ல என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு புதிய வழிமுறையை ஆராய்வது பற்றிய செய்தி அரசு ஊழியர்களிடையே பதட்டத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்படக்கூடிய பின்னடைவாக, மத்திய அரசு 8வது சம்பள கமிஷனை அமைக்காமல் போகலாம் என்றும் ஊதிய கமிஷன் முறையை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
அரசுக்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு
முன்பு போல புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்குப் பதிலாக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைக்க அரசாங்கம் வேறு வழியைப் பற்றி யோசித்து வருகிறது" என்று அரசாங்கத்திற்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சமீபத்திய சந்திப்புகள் அனைத்தையும் அறிந்த அந்த வட்டாரம் தெரிவித்தார்.
புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறித்த பரிசீலனை
அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்துவதற்கு பாரம்பரியமாக கிட்டத்தட்ட 10 ஆண்டு இடைவெளியில் பரிந்துரைகளை வழங்கும் ஊதியக் குழுக்களுக்குப் பதிலாக ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கக்கூடும் என்றும் முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
8வது ஊதியக் குழு அமைப்பது குறித்த அரசின் நிலைப்பாடு
முன்னதாக, நாடாளுமன்றத்தில், இது குறித்த கேள்வி நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும், இத னால், கால அவகாசம் குறித்த கேள்வி எழவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
8வது சம்பள கமிஷனை உடனடியாக அமைக்க வலியுறுத்தும் NC JCM
8வது சம்பள கமிஷனை அமைப்பதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று நிதி அமைச்சகம் கடந்த மாதம் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, தேசிய கவுன்சில் (பணியாளர்கள் தரப்பு) கூட்டு ஆலோசனை அமைப்பு (NC JCM) புதிய சம்பள கமிஷனை "உடனடியாக" அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியது.
ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தம்
டிசம்பர் 3 தேதியிட்ட ஒரு கடிதத்தில், NC JCM ஊழியர்கள் தரப்பு, 7வது CPC பரிந்துரைகளை அமல்படுத்தி ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், அடுத்த ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தம் ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியது. வரவிருக்கும் 2025 பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கிராஜுவிட்டி விதிகள்... 5, 7, 10 ஆண்டுகள் சர்வீஸுக்கு கிடைக்கும் பணிக் கொடை எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ