உங்கள் லேப்டாப்பை இந்த தவறான முறையில் சுத்தம் செய்ய வேண்டாம்!

வீட்டில் அல்லது அலுவலகத்தில் லேப்டாப்பை சுத்தம் செய்ய அழுக்கு துணி அல்லது சானிடைசர் பயன்படுத்துவோம். ஆனால் இப்படி சுத்தம் செய்தால் உங்கள் லேப்டாப் பழுதடையலாம்.

1 /6

மொபைல் போன்கள் தினசரி வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக இருப்பது போலவே, லேப்டாப்பும் மாறி வருகிறது. வேலை பார்ப்பது முதல், குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் வரை அனைத்திற்க்கும் லேப்டாப் பயன்படுத்துகிறது.

2 /6

எங்கு என்றாலும் சிலர் லேப்டாப்பை கையில் எடுத்து கொண்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி அவற்றை துடைக்க வேண்டி இருக்கும். பலர் அதை சுத்தம் செய்ய சானிடைசர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் உள்ள ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள்.

3 /6

சானிடைசர்களில் அதிக அளவு ஆல்கஹால் இருக்கும். இவற்றை கொண்டு லேப்டாப்பை சுத்தம் செய்தால் ஸ்கிரீன் பாதிக்கப்படலாம். இதனால் திரை மங்கலாக அல்லது கீறலாக மாறலாம்.

4 /6

சானிடைசர் லேப்டாப்பின் பிளாஸ்டிக் பாகங்களை சேதப்படுத்தலாம். இதனால் காலப்போக்கில் விரிசல் ஏற்படலாம். மேலும் கீபோர்டுகளையும் சேதப்படுத்தும்.

5 /6

சானிடைசர் உள்ளே உள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் சேதப்படுத்தும். சிலர் சொட்டுகள் லேப்டாப்பிற்குள் சென்றாலும் முற்றிலும் சேதமடைந்துவிடும்.  

6 /6

உங்கள் லேப்டாப்பை துடைக்க, அவற்றை SHUT DOWN செய்து மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தவும். சுத்தமான தண்ணீர் அல்லது ஸ்கிரீன் கிளீனரை பயன்படுத்தி துடைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.