வயது கூடினாலும் அல்லது குறைவான வயது இருந்தாலும் சிலருக்கு அதிகமான மன அழுத்தம், தூக்கமின்மை இருந்தால் முகத்தில் வயதான தோற்றம் ஏற்படும் அல்லது முகச்சுருக்கம் விழும். இது போன்ற பிரச்சனைகள் பெண்கள் மற்றும் ஆண்களின் மன அழுத்தத்தை மிகவும் பாதிக்கிறது என்று சொல்லப்படுகிறது.
வயதான தோற்றம் மற்றும் முகச்சுருக்கத்தைச் சரி செய்ய நீங்கள் அன்றாடம் உணவு சரியாக மேற்கொள்ள வேண்டும் மற்றும் நிம்மதியான தூக்கம் இருக்க வேண்டும். உங்கள் வயதான தோற்றம் சரியாகவில்லை என்றால் உங்களின் மன அழுத்தமே முக்கிய காரணம் என்றே சொல்லலாம். மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு வயதான தோற்றத்தைக் குறைக்க அற்புதமான ஆறு யோகாசனங்கள் பற்றி இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.
பொருட்கள் முகத்தில் பயன்படுத்துவதால் சிலருக்கு முகச்சுருக்கம் ஏற்படலாம். சிலர் மன அழுத்தத்தில் அதிகம் இருப்பதாலும் இந்த மாதிரி முகச்சுருக்கம், வயதான தோற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
முக யோகாசனம்: இந்த யோகாசனம் உங்கள் முகத்தில் இரு கைகளை வைத்து மசாஜ் செய்து தினமும் காலையும், மாலையும் முகம் கழுவும் நேரத்திலும் குளிக்கும் நேரத்தில் குறைந்தது ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். இது வயதான தோற்றத்தைக் குறைத்து சருமத்தை ஊக்குவிக்கிறது.
விபரீத கரணி: இந்த யோகாசனம் செய்வதால் உடலுக்குச் சீரான இரத்த ஓட்டம் பாய்கிறது. கண்களில் சுருக்கம் விழுவதைத் தடுக்கிறது மற்றும் இளமை தோற்றத்தை ஊக்குவிக்கிறது.
புஜங்காசனம்: முதுமையைத் தடுக்கும் யோகாசனங்களில் இது மிக முக்கிய யோகாசனம் ஆகும். இந்த யோகா போஸ் முதுகுத்தண்டைப் பலப்படுத்தி இளமை தோற்றத்தை ஊக்குவிக்கிறது.
சேது பந்தாசனம்: உடலுக்குச் சிறந்த பலத்தைக் கொடுக்கிறது மேலும் இது இளமை தோற்றத்தை ஊக்குவிக்கிறது.
உத்தனாசனம்: இந்த யோகாசனம் முகத்திற்குச் சீரான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முன்கூடிய வயதைத் தடுக்கிறது.
தடாசனம்:உடலுக்கு சிறந்த வலுவை கொடுத்து முகச்சுருக்கத்தை குறைக்கிறது. மேலும் இளமையான தோற்றத்தை அளிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)