ஒரு நாளை புத்துணர்வுடன் தொடங்குவதற்கு தேநீர் பருகுவதை பெரும்பாலனவர்கள் வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். காலப்போக்கில் தேநீரின் பல வடிவங்கள் பலராலும் விரும்பி அருந்தப்படுகிறது.
முதலில், பால் சேர்க்காத தேநீர், பால் சேர்த்த தேநீர், மூலிகை தேநீர், க்ரீன் டீ என பல்வேறு வகைகளில் பிரபலமாக இருக்கும் தேநீர், ஐஸ் டீ என்ற வடிவத்திலும் பலரும் விரும்பிக் குடிக்கின்றனர்.
பொதுவாக கருப்பு தேநீருக்கு ஆரோக்கியமான மாற்றாக பயன்படுத்தப்படுகிறது ஐஸ் டீ. தற்போது, உடனடியாக குடிக்கும் instant iced teaயாக விற்கப்படுகின்றன. மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் விற்பனை இயந்திரங்களில் பயன்படுத்தத் தயாராக இருக்கும் கேன்களில் கிடைக்கிறது.
மேலும் படிக்க | காலையில் எழுந்தவுடன் சூடா டீ குடிக்கும் பழக்கம் உண்டா? ஜாக்கிரதை
இந்தியாவில், உடனடி ஐஸ் டீ பாரம்பரிய ஐஸ் தேநீரை விட மிகவும் பிரபலமானது மற்றும் பெரும்பாலான உணவகங்கள், ஹோட்டல்கள், கஃபேக்கள் மற்றும் மால்களில் கிடைக்கிறது.
ஐஸ் டீயின் ஆரோக்கிய நன்மைகள்
பெரும்பாலும், குளிர்ந்த தேநீர் தயாரிக்க, கருப்பு தேநீரே அடிப்படை மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆரோக்கிய நலன்களுக்காக, பச்சை/வெள்ளை/ செம்பருத்தி/மல்லிகை/பெப்பர்மின்ட் போன்ற பல்வேறு விதங்களிலும் ஐஸ் டீ கிடைக்கிறது.
தற்போது, கெமோமில்-ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு/ மாதுளை/ இஞ்சி, எலுமிச்சை/தர்பூசணி, துளசி/பிளாக்பெர்ரி/புதினா/ பீச் என பல்வேறு விதமான ஐஸ் டீ விற்பனைக்கு வந்துள்ளது.
இதில், சர்க்கரைக்கு பதிலாக ஸ்டீவியா, தேங்காய் சர்க்கரை, ஆர்கானிக் தேன் போன்ற ஆரோக்கியமான சர்க்கரை மாற்றுகளையும் பயன்படுத்தலாம்.
இருப்பினும், நீரிழிவு மற்றும் வேறு நோய் பாதிக்கப்பட்டவர்கள் ஐஸ் டீயில், சர்க்கரையை சேர்ப்பதற்கு முன்பு ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசிப்பது நல்லது.
மேலும் படிக்க | நிம்மதியா தூங்கணுமா: இரவில் இந்த டீ குடிச்சா போதும்
ஆரோக்கியமான ஐஸ் டீ
ஆரோக்கியமான தேநீர் (மூலிகை/காஃபின் இல்லாத), புதிய மற்றும் பருவகால பழங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அளவு சர்க்கரை மாற்றுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டால், ஐஸ்கட் டீ மிதமான அளவில் உட்கொள்ளும் போது ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல ஆதாரமாக செயல்படும்.
சந்தையில் பரவலாகக் கிடைக்கும் கார்பனேட்டட் பானங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை விட ஒரு கோப்பை ஐஸ் தேநீர் நல்லது.
கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான நீர் தேவைகளை பூர்த்தி செய்ய ஐஸ் டீ சிறந்த தேர்வாகும். கூடுதலாக, புதிய மற்றும் பருவகால பழங்களின் நன்மை தோல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஐஸ்கட் டீயின் வரலாறு
இந்தியாவின் தேயிலை ஆணையரும் கிழக்கிந்திய பெவிலியனின் இயக்குநருமான மறைந்த திரு ரிச்சர்ட் ப்ளெச்சிண்டனால் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற உலக கண்காட்சியில் ஐஸ் தேநீர் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | Healthy Tea: நானே தேநீர்களின் ராணி: போட்டியில் களம் இறங்கும் ஐஸ் டீ
கண்காட்சியில் மக்களுக்கு சூடான தேநீர் வழங்க முடிவு செய்தார், ஆனால் வெப்பமான காலநிலையில் அதை உட்கொள்வதில் கூட்டத்தின் தயக்கத்தை விரைவில் கண்டுபிடித்தார். எனவே ப்ளெச்சிண்டனும் அவரது குழுவினரும் குளிர்ந்த ஈயக் குழாய்களைப் பயன்படுத்தி தேநீரை குளிர்விக்க முடிவு செய்தனர்.
குளிர்ந்த தேநீர் அனைவருக்கும் பிடித்துப் போனதால், இந்த யோசனையை அனைவரும் பாராட்டினார்கள். பாராட்டின் எதிரொலியாக அமெரிக்காவில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானமாக பிரபலமடைந்தது ஐஸ் டீ. இது விரைவில் உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபலமடைந்தது,
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Healthy Meat: சிக்கனை எப்படி சமைத்தால் நோயாளிகளுக்கு நல்லது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR