முடி உதிரும் பிரச்சனை இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நீங்களும் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தால், இது உங்களுக்கான பதிவாகும்.
பெரும்பாலான மக்கள் கூந்தலின் அழகை அதிகரிக்க ரசாயனம் நிறைந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பல இயற்கையான பொருட்களைக் கொண்டே இதை செய்ய முடியும். இவை பல வித பலன்களை அளிக்கும்.
உதிர்ந்த முடி-யை மீண்டும் பெற கடுகு எண்ணெய் மற்றும் கடுகு பொடியை பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
முடி வளர்ச்சியுடன் பொடுகு பிரச்சனைக்கும் தீர்வு
கடுகு பவுடர் கால்நடை தீவனத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. கடுகு பொடி பொடுகுத் தொல்லை முதல் முடி வளர்ச்சி வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடியை நீளமாக்குவது மட்டுமல்லாமல், அடர்த்தியாகவும் மாற்றலாம்.
மேலும் படிக்க | இந்த ஊதா நிற எண்ணெய் தலைவலிக்கு நிவாரணம் தரும்
கூந்தலின் அழகை மீட்டெடுக்க பயனுள்ளதாக இருக்கும்
கடுகு எண்ணெய் மற்றும் கடுகு கொண்டு செய்யப்படும் பொடி ஆகியவை கூந்தல் பராமரிப்பில் பல விதத்தில் பயன் தருகின்றன. கடுகு பொடி பார்ப்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இழந்த முடியின் அழகை மீட்டெடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, கடுகு எண்ணெய் / கடுகு பொடியை பயன்படுத்தி, உதிர்ந்த முடியை மீண்டும் பெறலாம்.
கடுகு பொடி செய்வது எப்படி?
கடுகு பொடி பல வழிகளில் வேலை செய்கிறது. ஹேர் மாஸ்க் தவிர, இது ஹேர் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கடுகை லேசாக காய வைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். அதன் பிறகு, இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் நிரப்பி வைக்கவும். ஹேர் மாஸ்க், ஹேர் பேக், ஃபேஸ் பேக் போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உஷார் மக்களே! மாரடைப்புக்கு முன் ஏற்படும் மாற்றங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR