Health Alert: ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்திடம் இருந்து விலகியே இருங்க..!!

கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2022, 11:16 AM IST
  • சில குறிப்பிட்ட உடல நல பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்க்க வேண்டும்.
  • கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று.
  • கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது.
Health Alert: ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கொய்யா பழத்திடம் இருந்து விலகியே இருங்க..!! title=

கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதால், பலரின் தேர்வாக உள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. கொய்யா பழம் சுவையிலும் சிறந்தது. அதை விரும்பி உண்பவர்களுக்கு இந்தியாவில் மிக அதிகம் எனலாம். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, பொட்டாசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை நிறந்துள்ளன, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது தவிர, இந்த பழத்தில் ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. எனினும், பல ஊட்டச்சத்துக்கள் உள்ள இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், சில குறிப்பிட்ட உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் எனவும், இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுகிறார். 

சில குறிப்பிட்ட உடல நல பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தவிர்க்க வேண்டும்:

1. குடல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள்

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடல் அதனை கிரகிக்க முடியாத காரணத்தால், வயிறு உப்பிசம் அதிகரிக்கும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்குகிறது, ஆனால் இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் எனவும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

2. உடலில் வீக்கம் உள்ளவர்கள்

கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும், உடலில் வைட்டமின் சி அதிகமாக உறிஞ்சப்படுவது கடினம். எனவே, கொய்யாவை அதிக அளவில் சாப்பிடுவது உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யா சாப்பிட்ட உடனே தூங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் வீக்கம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

3. சளி இருமல் உள்ளவர்கள்

சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

4. நீரிழிவு நோயாளிகள்

கொய்யா ஒரு குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் பழமாகும், இதன் காரணமாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் கொய்யாவில் இயற்கையான சர்க்கரை அதிகம் உள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், கொய்யாவை குறைவான அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு எத்தனை கொய்யாப்பழம் சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு நடுத்தர அளவிலான கொய்யாவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இதனை, ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல், அதை 2 வேளைகளாக பிரித்து சாப்பிடுவது நல்லது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் இதை உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், ஊட்டசத்து நிபுணரை அணுகி கலந்தாலோசிப்பது முக்கியம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News