நெல்லிக்காயில் வைட்டமின்கள், நார்ச்சத்து, சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், ஃபோலேட், நியாசின் அமினோ அமிலங்கள், தையாமின் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நமது இரத்தத்தில் உருவாகும் ப்ரீராடிக்கல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மூளைக்கு சீரான வேகத்தில் ரத்தம் செல்வதையும் உறுதி செய்கிறது. தொடர்ந்து நெல்லிக்காய் ஜூஸ் அருந்துபவர்களுக்கு ஞாபக சக்தியும் அதிகரித்து மனம் ஒருமைப்படுகிறது. இதனால், அல்சைமர் போன்ற நோய் ஆபத்து குறையும் என பட்டியல் போட்டாலும், நெல்லிக்காய் அனைவருக்கும் பலன் கொடுக்குமா என்றால், இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்த 4 நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவறுதலாக கூட நெல்லிக்காயை பயன்படுத்த வேண்டாம். நெல்லிக்காய் அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யாது என்பதுடன், அவர்களின் நோய்களை அதிகரித்து, நிலமையை மேலும் சிக்கலாக்கிவிடும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த பச்சை நிற எலுமிச்சை வடிவ பழத்தில் வைட்டமின்-சி அதிகளவில் உள்ளது.
ஆனால் நெல்லிக்காயின் மருத்துவ பலன்களை அடைய முடியாத நான்கு வகை நோயளிகள் இவர்கள்...
மேலும் படிக்க | Herbs In Menses: மாதவிடாய் பிரச்சனைக்கு அற்புதமான தீர்வுகளைத் தரும் ஆயுர்வேதம்
ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்கள் நெல்லிக்காயை தவிர்க்கவும்
நெல்லிக்காயின் தன்மை குளிர்ச்சியானது, எனவே குளிர்-சளி அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது நெல்லிக்காயை தவிர்க்கவேண்டும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நெல்லிக்காயை உட்கொண்டால், அது உங்கள் உடல் வெப்பநிலையை மேலும் குறைக்கலாம், அது, உங்கள் நோய் குணமாகும் காலத்தை நீட்டிக்கும் என்பதோடு, உடல்நிலை மேலும் மோசமாகலாம்.
இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்
ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்கள், நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதேபோல், இரத்தச் சர்க்கரைக் குறைவாக இருக்கும் நோயாளிகளும் இதை உட்கொள்ளக்கூடாது. நீரிழிவு நோயாளிகளில், சர்க்கரை உடலில் குறைவாக இருப்பவர்களுக்கு, நெல்லிக்காய் நுகர்வு, எதிர்மறையாக செயல்படும். அது உடல்நிலையை மோசமாக்கிவிடலாம்.
மேலும் படிக்க | அடிக்கடி இந்த இடத்துல வலி இருக்க? ஜாக்கிரதை கொலஸ்ட்ராலாக இருக்கலாம்
சிறுநீரக நோயாளிகளுக்கு நெல்லிக்காய்
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நெல்லிக்காயை சாப்பிடவே கூடாது. இதற்கு காரணம், நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரகத்தை வடிகட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படலாம் என்பதால் நீங்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
அறுவை சிகிச்சை
ஏதேனும் ஒரு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்கு 2 வாரங்களுக்கு முன்பு நெல்லிக்காய் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் இரத்த நாளங்கள் சிதைந்து இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
மேலும் படிக்க: Curry Leaves Benefits: இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ