Silambarasan: சிம்பு கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார். அதில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்பு நிராகரித்த படங்களை பற்றி பார்ப்போம்.
நடிகர் சிம்புவிற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அடிக்கடி அவரது படங்கள் வெளி வருவது இல்லை என்றாலும் எப்போதும் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
நடிகர் சிம்பு தனது சினிமா வாழ்க்கையில் பல பிளாக்பஸ்டர்கள் படங்களை நிராகரித்துள்ளார். சிம்பு நிராகரித்த 3 படங்களை பற்றி பார்ப்போம்.
கோ கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தில் முதலில் சிம்பு நடிக்க வேண்டியது. பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
இந்தியன் 2 கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் சிம்பு அதனை நிராகரித்துள்ளார்.
டிரைவிங் லைசென்ஸ் தமிழ் ரீமேக் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான டிரைவிங் லைசென்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் சிம்பு அதனை நிராகரித்துள்ளார்.