கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் - பாஜக சார்பில் போஸ்டர்!

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம் - கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

Written by - RK Spark | Last Updated : Jan 1, 2025, 02:59 PM IST
  • பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்க வேண்டும்.
  • பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  • பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் - பாஜக சார்பில் போஸ்டர்! title=

சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்கடசிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சாட்டையால் தன்னை தானே அடித்து கொண்டார். இந்நிலையில் கோவை மாநகரில் "பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம்" என்ற வாசகங்களுடன் காந்திபுரம் பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட இடங்களில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகைப்படம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு: 1000 ரூபாய் ரொக்கம்... விரைவில் வருகிறது நல்ல செய்தி!

2025 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும் - செல்லூர் கே.ராஜு

2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில், "2025 ஆம் ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சியான ஆண்டாக இருக்கும், 2025 ஆம் ஆண்டில் வீடியோ அரசிடமிருந்து தமிழக மக்களுக்கு விடியல் கிடைக்கும், தமிழக மக்களுக்கு விடியல் கிடைப்பதற்கான பயணத்தை அதிமுக முன்னெடுத்துச் செல்லும், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ அதிமுக ஆட்சி அமைய வேண்டும், சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைவதையும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார், தமிழக மக்களுக்காக அரசியல் செய்யக்கூடிய கட்சியாக அதிமுக திகழ்ந்து வருகிறது என 63 சதவீத மக்கள் வாக்களித்து உள்ளனர், 2025 ஆண்டு அதிமுகவிற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும், திமுக அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றால் ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும், அதிமுக ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார், ஜல்லிகட்டில் மாடுபிடி வீரர்களுக்கு உரிய இழப்பீடும், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகையில் உயர்வு? பட்ஜெட்டில் வரவிருக்கும் மாஸான அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News