Zee Tamil New Year Special: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
அதே போல் ஜீ தமிழ் பண்டிகை தினங்ககளில் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறுவதில்லை. அந்த வகையில் வரும் புத்தாண்டு தினத்திலும் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது ஜீ தமிழ்.
காலை 8 மணி முதல் என்னனென்ன நேரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தி கிரேட் இந்தியன் கிச்சன்
காலை 8 மணிக்கு ஆர் கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான " தி கிரேட் இந்தியன் கிச்சன் " என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ராகுல் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷின் வாழ்க்கை வீட்டிற்குள் மட்டுமே சுயன்றடிக்க ஒரு கட்டத்தில் அவள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்த சாதிக்க முயற்சிக்கிறாள். ஐஸ்வர்யாவின் இந்த முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம்
இந்த திரைப்படத்தை தொடர்ந்து காலை 10 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் YYY என்ற தலைப்பில் மோகன சுந்தரம், பர்வீன் சுல்தானா, சாந்தாமணி என பலர் பங்குபெறும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் படிக்க | “நான் நாத்திகனாக மாறிய பிறகு வாழ்க்கை ஜாலியாக இருக்கிறது” நடிகர் சத்யராஜ் பேச்சு!
அயலி
பட்டிமன்றத்தை தொடர்ந்து காலை 11:30 மணிக்கு ஜீ 5 தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று மக்களின் கவனத்தை ஈர்த்த அயலி வெப் சீரிஸ் திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது. மூட நம்பிக்கையால் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் படிப்பில் சாதிக்க துடிக்கும் இளம் பெண்கள் கட்டுப்பாடுகளை உடைத்து இருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் இந்த வெப் சீரிஸ்.
பிரதர்
தொடர்ந்து மதியம் 3 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக ஜெயம் ரவி, ப்ரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா சாவ்லா என பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரதர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. நீதி, நேர்மை என வாழும் ஜெயம் ரவியால் அவனது அக்கா குடும்பம் இரண்டாக உடைகிறது. அவனது குடும்பத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதையெல்லாம் கடந்து ஜெயம் ரவியின் குடும்பம் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தது? என அக்கா தம்பி பாசத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் தான் பிரதர்ஸ்.
புத்துணர்வையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் சூப்பர் ஹிட் திரைப்படங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் சிறப்பு பட்டிமன்றம் என ஜீ தமிழுடன் இணைந்து இந்த புத்தாண்டை கொண்டாட தயாராகுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ