Flipkart Big Bachat Days Sale: பிரீமியம் 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் Samsung Galaxy S24 Ultra 5G முதலிடத்தில் உள்ளது. 200 எம்பி கேமரா கொண்ட இந்த போன் பலருக்கு பிடித்தமான ஸ்மார்ட்போனாக உள்ளது. இதை வாங்க விருப்பம் கொண்டவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் தற்போது பிளிப்கார்ட் பிக் பச்சத் டேஸ் விற்பனை நடந்து வருகின்றது.
பிளிப்கார்ட்டில் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இதில், Samsung Galaxy S24 Ultra 5G உடன், இன்னும் பல 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகளை பெற முடியும். பிளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Samsung Galaxy S24 Ultra 5G
Samsung Galaxy S24 Ultra 5G ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் சேலில் 3% குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போனின் விலை ரூ.1,34,999. ஆனால், இந்த சேலில் இதை வெறும் ரூ.1,29,999 -க்கு வாங்கலாம். இந்த பிரீமியம் 5G ஸ்மார்ட்போனை 4 வண்ணங்களில் வாங்குவதற்கான விருப்பம் உள்ளது. இதற்கு 4.6 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
REDMI 13C 5G
Flipkart Big Bachat Days விற்பனையில் REDMI 13C 5G ஸ்மார்ட்போனை 35% குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தின் இந்த சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆகும். எனினும், இந்த விற்பனையில் இதை ரூ.8,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனை 3 வண்ணங்களில் வாங்கலாம். இது 4.3 நட்சத்திர மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Vivo T3 Ultra
விவோவின் இந்த Vivo T3 Ultra ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் விற்பனையில் 11% குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனை அதன் அசல் விலையான ரூ.35,999 -க்கு பதிலாக ரூ.31,999 -இல் வாங்கலாம். இந்த போன் 4.5 நட்சத்திர மதிப்பீட்டில் 2 வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
OPPO K12x 5G
பிளிப்கார்ட் விற்பனையில் OPPO K12x 5G ஸ்மார்ட்போனை 23% குறைவாக வாங்கலாம். Flipkart Big Savings Days Sale விற்பனையில், 23% சலுகைக்குப்பிறகு அதன் அசல் விலையான 16,999 ரூபாய்க்கு பதில் வெறும் 12,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போன் 4.5 நட்சத்திர மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. இது 3 வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
POCO C61
POCO C61 ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Days விற்பனையில் அதன் அசல் விலையான ரூ.8,999 -க்கு பதிலாக ரூ.5,999க்கு வாங்கலாம். இந்த போனை 3 வண்ணங்களில் முன்பதிவு செய்யலாம். தளத்தில் இதற்கு 4.1 நட்சத்திர மதிப்பீட்டு கிடைத்துள்ளது.
இந்த Flipkart விற்பனை 2025 ஜனவரி 1 முதல் 5 வரை தொடரும். Samsung Galaxy S24 Ultra 5G தவிர, இன்னும் பல ஸ்மார்ட்போன்களிலும் சிறப்புச் சலுகைகளைப் பெறலாம்.
மேலும் படிக்க | iPhone 16 வாங்க அட்டகாசமான வாய்ப்பு: ரூ.16,000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ