உடல் பலவீனமாகிவிட்டதா? அதற்குக் காரணம் ஹீமோகுளோபின் இல்லாததா? அப்படியென்றால், உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலின் வலிமையை திரும்பப்பெறலாம். ஹீமோகுளோபின் நமது இரத்தத்தில் இருக்கும் ஒரு முக்கிய உறுப்பு, அது குறைந்துபோனால், சோர்வும் பலவீனமும் உணர ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில், சில உலர் பழங்களை சாப்பிட்டு, உடல் அசதியைப் போக்கலாம்.
ஹீமோகுளோபின் குறைபாடு
நமது இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், உடலில் பலவீனம் வர ஆரம்பித்து, அன்றாட வாழ்க்கையின் இயல்பான செயல்பாடுகளைச் செய்வது கடினமாகிவிடும். ஹீமோகுளோபின் என்பது இரத்த அணுக்களில் இருக்கும் இரும்பு அடிப்படையிலான புரதமாகும். இது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்கும் வேலையைச் செய்கிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்
உடலில் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும், அப்போதுதான் ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்க முடியும். உணவைத் தவிர, அப்படியே, சிற்றுண்டியாகவும் அல்லது எப்போது வேண்டுமானாலும் சாப்பிடக்கூடிய உலர் பழங்கள் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை சீராக வைத்திருக்கும்.
மேலும் படிக்க | காலை எழுந்ததும் இந்த தவறுகளை மறந்தும் பண்ணாதீங்க!
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உலர் பழங்கள்
பிஸ்தா
பிஸ்தாவின் சுவை அனைவரையும் ஈர்க்கக்கூடியது. ஒரு கைப்பிடி பிஸ்தாவில் 1.11 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இதை உணவில் தினசரி சேர்த்துக் கொண்டால், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும், இதன் காரணமாக ஹீமோகுளோபின் குறைபாடு நீங்கும்.
முந்திரி
பல இனிப்புகள் மற்றும் சமையல் வகைகளில் முந்திரி பருப்பு பயன்படுத்தப்படுகிறது, முந்திரியில் சுமார் 1.89 மில்லிகிராம் இரும்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாது. இரும்பு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டை அகற்ற முந்திரிப் பருப்பை அவ்வப்போது சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாகும்.
வால்நட்
வால்நட் மிகவும் சத்தான உலர் பழமாகும், இதை தினசரி சாப்பிட்டு வந்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது. ஒரு கைப்பிடி தோலுரித்த அக்ரூட் பருப்பில் இருந்து உடலுக்கு சுமார் 0.82 மி.கி இரும்புச்சத்து கிடைக்கிறது. ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தால், தினமும் வால்நட்களை உட்கொள்ள வேண்டும்.
பாதாம்
மூளையை கூர்மைப்படுத்த, தினமும் பாதாம் சாப்பிட வேண்டும் என்று உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ரத்தசோகை, சோர்வு, பலவீனம் என பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தாலும், தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஹீமோகுளோபின் அளவு
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஹீமோகுளோபின் அளவு மாறுபடுகிறது. ஆண்களுக்கு, ரத்தத்தில் 13.2-16.6 என்ற அளவிலும், பெண்கலுக்கு 11.6-15 என்ற அளவிலும் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை ஒரு டெசிலிட்டருக்கு கிராம் என்ற கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹீமோகுளோபினின் வேலை என்ன?
ஹீமோகுளோபினின் முக்கிய செயல்பாடு ஒவ்வொரு திசுக்களுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதாகும். ஆக்ஸிஜனுடன் பிணைப்பை உருவாக்குவதும், ஆக்ஸிஜனை வெளியிடுவதும் நமது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் செய்யும் வேலையாகும்.
உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், ஹீமோகுளோபின் அதை சமன் செய்யும். ஹீமோகுளோபின் கார்பன் டை ஆக்சைடை உயிரணுக்களிலிருந்து நுரையீரலுக்கு அனுப்புகிறது. .
ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
இரத்த சிவப்பணுவில் ஹீமோகுளோபின் அளவு இயல்பை விட குறைவாக இருந்தால், பல நோய்கள் ஏற்படும். உடலில் இருந்து ரத்தம் வெளியேறினால், அதன் உறையும் தன்மை குறைவது, புற்றுநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், தைராய்டு, தலசீமியா உள்ளிட்ட பல நோய்களை சீர் செய்ய உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டும்.
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் எல்லாம் உயிருக்கே ஆபத்து..! தவறுதலாக கூட புறக்கணிக்காதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ