புதுடெல்லி: உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் நல்லதை விட உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கின்றன என்பதை எப்படி அறிவது? நீங்கள் எடை கூடுவதை உணர்ந்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உடல் எடை அதிகமானால், டைப் 2 நீரிழிவு, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். ஏன் எடை அதிகரிக்கிறது என்று தெரியவில்லையா? இந்த 5 வாழ்க்கை முறை பழக்கங்களை சரிசெய்தால் போதும்.
அதிக சர்க்கரை நுகர்வு
முதலில், உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்கவும், இனிப்பாக இருந்தாலும் சர்க்கரை உங்களுக்கு உண்மையிலுமே நல்லது செய்வதில்லை. உங்களுக்கு எதிரி சரக்கரை என்பதையும், உங்கள் நண்பர் அல்ல என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். எடை அதிகரிப்பதற்கு ஒரு பெரிய காரணம் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதாகும்.
எப்போதாவது சில இனிப்புப் பொருட்களை சாப்பிடலாம் ஆனால் கண்டிப்பாக அதை தினசரி சாப்பிடக்கூடாது. அதிக இனிப்பு, அதிக சோகத்தையே கொடுக்கும்.
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க
அதிகப்படியான ஆல்கஹால்
அதிகப்படியாக மது அருந்துவது, வாழ்க்கையை அனுபவிப்பது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை நன்றாக கவனித்துக் கொள்ளவும். அதிகமாக மது அருந்துவதால், பிற உடல் நலப் பிரச்சனைகளை மட்டும் அல்ல, சேர்ந்து எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. பலவிதமான மது பானங்களில் அதிக கலோரிகள் உள்ளன.
சீரற்ற உணவு
உணவைத் தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், ஆனால் குறைவாக உண்டாலே போதும். இது எடையை பராமரிப்பதில் இன்றியமையாத காரணியாகும். ஆரோக்கியமற்ற உணவு முறைகள் உங்கள் செரிமானம், குடல் ஆரோக்கியம் மற்றும் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
தவறான உணவுகளை உட்கொள்வது
தவறான உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையை அதிகரிக்கும்.
அதிகமாக டிவி பார்ப்பது
ஒன்றரை மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது 3.5 கன சென்டிமீட்டர் கூடுதல் வயிற்றுக் கொழுப்பை ஏற்படுத்தும் என்பதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடையலாம். உட்கார்ந்தபடியே வேலை செய்யும் வாழ்க்கை முறையும் உடல் எடையை அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருங்கள்! உடல் எடையை கட்டுக்குள் வையுங்கள். தொப்பையை வளர்க்காதீர்கள்...
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க என்ன செய்ய வேண்டும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ