கொரோனா வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களை வித்தியாசமாக பாதிக்கிறதா?

பல கேள்விகளுக்கிடையில், இந்த வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்களை ஒரே மாதிரியாக பாதிக்கிறதா, அல்லது ஒருவரை மட்டும் அதிகம் பாதிக்கிறதா? யாருக்கு அதிக ஆபத்தில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 11, 2020, 11:17 AM IST
  • கோவிட் -19 ஆண்களின் உடலை அதிகம் பாதிக்கிறது.
  • ஆண்கள் பெண்களை விட அதிகமாக புகைப்பிடிப்பதால் தொற்று ஏற்படலாம்.
  • பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • ஆண்களின் உடலில் எஸ் -2 ஏற்பிகள் (Ace-2 Receptors) அதிகமாக உள்ளன
கொரோனா வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களை வித்தியாசமாக பாதிக்கிறதா? title=

Coronavirus Risk: கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் அனைத்து நாடுகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலருக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்டம் சோதனைகளில் வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் கோவிட் -19 (Covid-19 Pandemic) தொடர்பான பல விஷயங்கள் ஒவ்வொரு நாளும் மெது மெதுவாக வெளிவருகின்றன. கொரோனா வைரசால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கிட்டத்தட்ட அனைவரிடமும் இன்னும் நிறைய சந்தேகம் உள்ளது. பல கேள்விகளுக்கிடையில், இந்த வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்களை ஒரே மாதிரியாக பாதிக்கிறதா, அல்லது ஒருவரை மட்டும் அதிகம் பாதிக்கிறதா? யாருக்கு அதிக ஆபத்தில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, கோவிட் 19 இன் தொற்று பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரே மாதிரியாக தான் தாக்குகிறது. ஆனால் இது ஆண்களின் உடலை அதிகம் பாதிக்கிறது என்று சுகாதார வல்லுநர்கள் (Health Experts) நம்புகிறார்கள். அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ |  COVID-19 மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு புளித்த உணவுகள்! ஆச்சரியத் தகவல்!!

ஆண்களுக்கு அதிக ஆபத்து:
சுகாதார வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, தரவுகளின்படி, இந்த வைரஸ் ஆண்களின் உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை மதிப்பிட்டுள்ளதாகக் கூறபப்டுகிறது. பொதுவாக, ஆண்களுக்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் குறித்த பயம் அதிகம். கூடுதலாக, ஆண்கள் பெண்களை விட அதிகமாக புகைப்பிடிப்பதால் (Smoking) நுரையீரல் தொற்று ஏற்படலாம்.

பெங்களுக்கு மீது கொரோனாவின் தாக்கம்: 
நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளில் கொரோனா வைரஸ் காரணமாக இறப்புகளில் 65% ஆண்கள் மற்றும் 35% பெண்கள். ஆய்வின்படி, ஆண்களின் உடலில் எஸ் -2 ஏற்பிகள் (Ace-2 Receptors) அதிகமாக உள்ளன. இந்த ஏற்பி கோவிட் -19 க்கான நுழைவு வாயிலாக' செயல்படுகிறது. இந்த ஏற்பிகள் ஆண்களின் நுரையீரல், குடல் மற்றும் இதயத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன.

ALSO READ |  கொரோனா காலத்தில் புகைப்பிடித்தால் நீரிழிவு - இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவு ஏற்படலாம்

பெண்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது:
பெண்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) உள்ளது, அதே போல் எந்த நோய்க்கும் எதிராக போராட அதிக சக்தி உள்ளது. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன்கள் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது. நோய்த்தொற்றின் அபாயத்தையும் குறைக்கவும். அதே நேரத்தில், ஆண்களில் காணப்படும் டெஸ்டோஸ்டிரோன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

Trending News