Hair Oil vs Dandruff: பொடுகுத் தொல்லை என்பது பலருக்கு பிரச்சனையான ஒன்று. பொடுகுத் தொல்லையால் அவதிப்படும் பெரும்பாலானவர்கள், தலை வறட்சியாக இருப்பதால் பொடுகு வருகிறது என்று நினைக்கிறார்கள். இது உண்மையா? டெய்கா ஆர்கானிக்ஸ் நிறுவனர் திருமதி ஆர்த்தி ரகுராம் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்கிறார். முதலில் பொடுகு என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்துக் கொள்வோம். பொடுகு என்பது உச்சந்தலையில் தோன்றும் பூஞ்சை தொற்று ஆகும், இது பொரியாகவும், செதில்களாக தோன்றும்.
தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் பொடுகு அதிகரிக்குமா?
பொடுகு என்பது தலையில் ஏற்படும் வறட்சி அல்ல. சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாகும்போது சருமத் துளைகள் அடைபட்டு முகப்பருவை உருவாக்குவது போல, தலையில் எண்ணெய் அதிகமாக படியும்போது பொடுகு உருவாகிறது
தலைமுடிக்கு அதிக எண்ணெய் தேய்த்து, நீண்ட நேரம் வைத்திருந்தால், இறந்த சரும செல்கள் தலைப்பகுதியில் அதிகமாக குவிந்துவிடும். இது தொடரும்போது, எண்ணெய் மயிர்க்கால்களில் படிந்து, பொடுகு ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்
டுகு என்பது உச்சந்தலையில் ஈஸ்ட் தொற்று போன்றது என்பதால், எண்ணெய் அதிக பாக்டீரியாக்களை உச்சந்தலையில் ஈர்க்கிறது. பிறகு, அது உலர்ந்த மற்றும் செதில்களாக மாறும்.
எண்ணெய் நிறைந்த உச்சந்தலையானது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறிவிடும். ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை உச்சந்தலையில் பாக்டீரியாக்கள் அதிகமாக வளர உதவுகின்றன. எனவே, பொடுகுத் தொல்லை இருக்கும்போது, தலையில் எண்ணெய் தேய்ப்பதால், பொடுகுத்தொல்லை மேலும் அதிகரிக்கும்.
பொடுகை குறைக்க வழிகள் என்ன?
வறண்ட தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படுவதாகவும், எண்ணெய் போட்டால் அது சரியாகிவிடும் என்பது தவறு என்றால், பொடுகுக்கு நிவாரணம் என்ன என்ற கேள்வி எழும். பொடுகுக்கு சிகிச்சையளிக்க, எலுமிச்சை, கற்றாழை ஜெல் மற்றும் வெந்தயத்தை அரைத்து தலைக்கு போடுவது என பல கை வைத்தியங்கள் உண்டு.
மேலும் படிக்க | இந்த ஒரு இலை போதும்; முடி கருப்பாகவும், பட்டுப் போலவும் மாறும்
அதேபோல, ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து அல்லது பேக்கிங் சோடாவை தண்ணீரில் கரைத்து தலையை அலசினால் பொடுகுத் தொல்லை ஏற்படுவதைத் தடுக்கலாம். தலையில் மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்துவதை உறுதிசெய்வது அவசியம். பொடுகைத் தடுக்க, தலையில் அழுக்கு சேர்வதையும் இறந்த சரும செல்கள் தங்குவதையும், அதிக எண்ணெய் தலையில் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்வதும் அவசியம்.
நிச்சயமாக, பொடுகுக்கு சிகிச்சை அளிக்க, தலையில் எண்ணெய் தடவுவது தீர்வாகாது. தலைமுடிக்கு எண்ணெய் தடவினால், தலையில் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மை தான். இது முடி உதிர்தல் மற்றும் முடியின் போஷாக்கு மற்றும் பளபளப்பு குறைவதற்கு வழிவகுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ