புதுடெல்லி: இன்று உலக பக்கவாதம் தினம் (World Stroke Day) அனுசரிக்கப்படுகிறது. மூளையின் எந்தப் பகுதிக்கும் ரத்த சப்ளை திடீரென நிறுத்தப்படும்போது, அந்த பகுதியில் இருக்கும் செல்கள் (Cells) இறக்கின்றன. இந்த நிலையை மூளை பக்கவாதம் என்று குறிப்பிடுகிறோம்.
பியூட்டி பார்லரில் மசாஜ் செய்வதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா!
கதையல்ல நிஜம்!!! கற்பனையல்ல, உண்மையான விஷயம் தான் இது. உடலை பராமரிப்பதற்காகவும், வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மட்டுமல்ல, ஃபேஷன் மற்றும் அழகுக்காக நீங்கள் செல்லும் பியூட்டி பார்லர், உங்களை மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
உண்மையில், பார்லரில் செய்யும் அழகுக்கான மசாஜ் அல்லது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மசாஜ் செய்வது மூளையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மூளை பக்கவாதம் ஏற்படவும் இது காரணமாக இருக்கலாம்.
தலைநகர் டெல்லியில் இப்படி ஒரு வழக்கு பதிவாகியுள்ளது என்கிறார் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சந்திரில் சுக் (Neurologist Dr. Chandril Chugh). வந்தனா என்ற பெண் கழுத்து பிடிப்புடன் மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இனி அவரால் எழுந்திருக்க முடியாது என்று கூறினார்கள். பார்லரில் அவருக்கு மசாஜ் செய்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளைக்கு செல்லும் நரம்பில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. 3 நாட்கள் மருத்துவமனையில் இருந்த வந்தனாவுக்கு தற்போது குணமாகிவிட்டது. ஆனால் இன்னும் அவருக்கான சிகிச்சை தொடர்கிறது.
கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கழுத்தின் பின்புறத்தில் முதுகெலும்பில் இருந்து மூளைக்கு செல்லும் பல முக்கியமான நரம்புகள் உள்ளன. ஆனால் பலர் கழுத்தின் பின்புறப் பகுதியில் மசாஜ் செய்கிறார்கள். அப்போது நரம்பு தவறாக அழுத்தப்படுவதால், கழுத்தில் stiffness மற்றும் வேறு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதுதான் எனக்கும் நடந்தது என்று வந்தனா சொல்கிறார்.
அதேபோல, யோகாவை தவறான வழியில் செய்வதால் சிலருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும். கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் லேசாக மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். மசாஜ் செய்து பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் முரட்டுத்தனமாக மசாஜ் செய்பவர்களிடம் ஒருபோதும் மசாஜ் செய்துக்கொள்ள வேண்டாம்.
மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
மூளையில் பக்கவாதம் ஏற்படுவதற்கு பற்பல காரணங்கள் உள்ளன. உயர் ரத்த அழுத்தம், புகைபிடிப்பது, நீரிழிவு நோய், அதிக அளவிலான கொழுப்பு, ஃபாஸ்ட் ஃபுட்டை அதிகமாக சாப்பிடுவது, மன அழுத்தம் ஆகியவை மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.
சிகிச்சை/தடுப்பு நடவடிக்கைகள்:
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, வழக்கமான உடற்பயிற்சி, தியானம், சுத்தமான காற்று, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, மூளைக்கு வேலை கொடுக்கும் சதுரங்க விளையாட்டு அல்லது புதிரைத் தீர்ப்பது போன்ற விளையாட்டுகள் நன்மை தருவதாக கருதப்படுகின்றன.
அதாவது, பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் போன்றவையே நமக்கு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் சேதம் பெரும்பாலும் நிரந்தரமாகி விடுகின்றன. அதிலும், ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் சரியான வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி செய்து, சிறந்த வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள்.
தினசரி அரை மணி நேர நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, யோகா மற்றும் தியானம் செய்வதும் ஆரோக்கியத்திற்கு உகந்தவை. உப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற உணவுப் பொருட்கள் மீதான ஆசையை ஒழித்தால் போதும். சுத்தமான குடிநீரை போதுமான அளவு பருகினால், மீது நீங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?
நான்கில் ஒருவருக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கவலைக்குரிய செய்தி. நகரங்களை விட கிராமப்புறப் பகுதிகளில் மூளை பக்கவாதம் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில் மனிதர்களின் இறப்புக்கு இரண்டாவது பெரிய காரணம் பக்கவாதம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | COVID-19 நோயை குணப்படுத்துமா Osteoporosis?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR