தியானம் என்பது ஒரு மனிதன் தன்னை தானே புரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். மன அழுத்தத்தை குறைத்து முழுமையான மன நிம்மதியை தருவதில் தியானம் மிகுதியான பங்காற்றுகிறது. பழங்காலத்தில் நமது மூதாதையர்களின் உணவு பழக்கம் முதல், அன்றாட வாழ்கையில் அவர்கள் பின்பற்றிய ஒவ்வொன்றும் இன்றைய தலைமுறையினரை வெகுவாக ஈர்கிறது என்றால் அது மிகையாகாது.
இன்று உணவு உட்கொள்ள டைனிங் டேபிள், காலையில் சூரிய ஒளியை பார்கும் பழக்கம் ஒரு சிலரிடம் மட்டுமே.., இதுபோன்ற நமது அன்றாட பழக்க வழக்கத்தில் ஏற்பட்டுள்ள சிறிய சிறிய மாற்றங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை நம்மில் ஏற்படுத்தி வருகிறது. அதை புரிந்துகொண்ட இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமாக பழமையின் பழக்க வழக்கங்களை நோக்கி நகரத்தொடங்கி இருக்கின்றன.
அதில் மிக முக்கியமானது தியானம். தரையில் அமர்ந்து உணவு உட்கொள்வதே ஒரு வகையான தியானம்தான். இதுபோன்ற பல்வேறு தியான ஆசனங்களால் உறவுகள் மத்தியில் உறுதியான ஒரு இணக்கம் ஏற்படுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவிலும் திருப்தி இருப்பதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
மேலும் படிக்க | மகளிர் தினத்தன்று யோகாவில் புதிய சாதனை!
ஒருவர் தியானத்தை மேற்கொள்ளும்போது அவருக்குள் ஏற்படும் சில மாற்றங்களை பிறரால் நன்றாகவே உணர முடியும். மனக்கட்டுப்பாடு, பிரறிடம் பொருமை கொள்ளுதல், பிறரின் செயலை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் நடந்துகொள்வது, கணவன் மனைவி இடையே புரிதலுடனான உடல் உறவு என ஏராளமான நல்வினைகளை தியானம் என்ற ஒற்றை நிகழ்வு நிறைவாக செய்கிறது.
இதனால் தியானம் செய்யும் நபரால் வாழ்கையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை மிக எளிதாக எதிர்கொண்டு செல்ல முடியுமாம். இதற்கு நாள் ஒன்றுக்கு நாம் மணிக்கணக்கில் செலவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் சில நிமிடங்கள் மட்டுமே செய்யும் தியானத்தால் நமது வாழ்கையின் பல்வேறு அம்சங்களில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என யோகா பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தனி ஒரு மனிதன் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யும்போது, அவனுக்குள் இருக்கும் எண்ணங்களில், செயல்களில் சரி எது தவறெது என பிரித்துணர்ந்து அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறான். சுய புரிதல்தான் இந்த சமூகத்தின் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகை செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்றே சொல்லலாம்.
அதற்கு இந்த தியானம் உதவி செய்கிறது. நினைவாற்றல் மற்றும் சுய விழிப்புணர்வை நம்முள் ஏற்படுத்தும் இந்த தியானத்தால் ஒரு நண்பரை தேர்வு செய்வது முதல் பல்வேறு விஷயங்களில் சரியான முடியை எடுக்க தெளிவான ஆற்றலையும் வழங்குகிறது. தியானம் நிதானம் இரு வார்த்தைகள்தான் ஆனால் பெரிய மாற்றம்.
மேலும் படிக்க | யோகா செய்யும் நாயை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR