Diabetes Control Tips: இந்த தவறுகள் இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்கும்

இன்று ஒவ்வொரு வீட்டிலும் வாழ்க்கைமுறை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிச்சயம் காணலாம். இவற்றில் மிகவும் பொதுவான நோய் சர்க்கரை நோய்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2024, 03:53 PM IST
  • இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் சில விஷயங்களை தவிர்ப்பது அவசியம்.
  • தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில தவறுகள் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது.
  • உடல் ஆரோக்கியமாக இருக்க சரியான ஓய்வு அதாவது தூக்கம் தேவை.
Diabetes Control Tips: இந்த தவறுகள் இரத்த சர்க்கரை அளவை எகிற வைக்கும் title=

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தான் பல்வேறு நோய்களுக்கு முல காரணமாகின்றன. இன்று ஒவ்வொரு வீட்டிலும் வாழ்க்கைமுறை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிச்சயம் காணலாம். இவற்றில் மிகவும் பொதுவான நோய் சர்க்கரை நோய். சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிய நிலை கூட ஏற்படலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் சில விஷயங்களை தவிர்ப்பது அவசியம்

இரவு நேர பழக்க வழக்கங்களை பொறுத்தவரை பலர் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில தவறுகள் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், முடிந்தவரை இந்த தவறுகளை செய்வதைத் தவிர்க்கவும்.

போதுமான தூக்கம் இல்லாத நிலை

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க சரியான ஓய்வு அதாவது தூக்கம் தேவை. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இரவில் சீக்கிரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சுமார் 8 மணி நேரம் போதுமான தூக்கத்தைப் பெற முயற்சிக்கவும். உங்கள் உடலுக்கு சரியான ஓய்வு கொடுக்காமல், இரவு வரை விழித்திருந்தால், அது வளர்சிதை மாற்ற அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மேலும், தூக்கமின்மை அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாதத்தால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் எரிச்சல் காரணமாக, கார்டிசோல் ஹார்மோன் அதிகரிக்கத் தொடங்குகிறது, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் காணலாம்.

இரவு உணவு உண்ட பின் உடனடியாக தூங்குதல்

நீரிழிவு நோயாளியாக இருந்தால், சாப்பிட்ட பின் உடனே படுப்பதை  முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு உணவிற்குப் பிறகு, குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் நடக்கவும். உங்களால் எங்கும் வெளியே செல்ல முடியாவிட்டால், வீட்டில்  உள்ளேயே சிறிது நேரம் நடக்கவும்.

காஃபின் அல்லது இனிப்புகளை உட்கொள்வது

சிலருக்கு இரவு உறங்கும் முன் உணவுக்குப் பிறகு இனிப்பு அல்லது டீ அல்லது காபி சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்களுக்கும் இந்த பழக்கங்களில் ஏதேனும் இருந்தால், இன்றே அவற்றை விட்டு விடுங்கள், ஏனெனில் இந்த பழக்கங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கின்றன. இனிப்பு பசியை போக்க, உணவுக்குப் பிறகு சிறிது வெல்லம் சாப்பிடலாம் மற்றும் டீ அல்லது காபிக்கு பதிலாக, கிரீன் டீ அல்லது பிளாக் டீயை உங்கள் வழக்கத்தில் சேர்க்கலாம்.

மேலும் படிக்க | சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... இந்த பிரச்சனைகள் இருந்தால் கொஞ்சம் தள்ளியே இருங்க

இரவு உணவு 

உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், இரவு உணவின் நேரம் மற்றும் டயட் இரண்டிலும் கவனம் தேவை. முதலில், இரவு உணவிற்கான நேரத்தை நிர்ணயம் செய்து, தினமும் ஒரே நேரத்தில் இரவு உணவைச் சாப்பிடுங்கள். இரவு உணவை முடிந்தவரை விரைவாக முடிக்க முயற்சி செய்யுங்கள். இது தவிர, ஹெவியான இரவு உணவை  தவிர்க்கவும். குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இதற்கு பதிலாக, குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

தண்ணீர்

குளிர்காலத்தில், அடிக்கடி தாகம் ஏற்படாது. அதனால் உடலுக்கு சரியான அளவு தண்ணீர் கிடைக்காது. பலர், அடிக்கடி சிறூநீர் கழிக்க நேரிடுமோ என எண்ணி, இரவில் தண்ணீர் குடிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள். உடனடியாக இந்தப் பழக்கத்தைக் கைவிடுங்கள். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல. எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பிளாக் காபி vs பிளாக் டீ : காலையில் குடிக்க எது பெஸ்ட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News