ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் உதவுகிறது. இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். உடல் உறவின் மீதே வெறுப்பு உண்டாகலாம். எப்போதும் ஒரு வித சோர்வையும், பலவீனத்தையும் உணரலாம். மன உளைச்சல் ஏற்படலாம். இவையெல்லாம் இந்த டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைபாட்டால் வருவதே.
பெண்களுக்கும் இந்த ஹார்மோன் சுரப்பு இருக்கும். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகளவு சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் இயல்பாக சுரக்க வேண்டிய அளவு சீராக இருந்தால் இல்லற வாழ்வு இனிமையாக இருப்பதோடு, எப்போதும் புத்துணர்ச்சியும் இருக்கும். இதன் அளவு குறையும் போது இவர்களுக்கு பாலுணர்ச்சி குறைவாக தொடங்கும். அது மட்டுமல்ல, பல்வேறு இதர உடல் கோளாறுகளையும் உண்டாக்கும்.
உடலில் இந்த ஹார்மோன் குறையும் போது சில அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியம் செய்யக்கூடாது.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் செயல்பாடு
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலுறவுக்கான ஆசையை அதிகரித்து, விந்தணுக்களின் உற்பத்தியை சரியாக வைத்திருப்பதோடு, தாடி, மார்பு போன்ற ஆண்களின் உடலில் தோன்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையும் போது தோன்றும் அறிகுறிகள்
1. உடலுறவில் நாட்டமின்மை
டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாலியல் தூண்டுதலின் பற்றாக்குறை இருக்கும். செக்ஸ் மீது ஈர்ப்பு குறைவாக இருக்கும்.
2. எலும்புகள் பலவீனமடைதல்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால், எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால், எலும்பு தொடர்பான நோய்களும் வரலாம்.
3. தசைகள் பலவீனமடைதல்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் குறைபாடு இருந்தால், தசைகளும் பலவீனமடைகின்றன.
4. உடல் பருமன்
டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உடல் பருமன் இருக்கும். எனவே உங்கள் உடல் பருமனை புறக்கணிக்காதீர்கள்.
5. உடலில் முடி வளர்ச்சி குறையும்
ஆண்களின் உடலில் தாடி-மார்பு போன்ற பகுதிகளில் முடிகள் அதிகம் இருக்கும். டெஸ்டோஸ்டிரோன் குறைவதால், இந்த முடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவது இயற்கை என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.