தொப்பையை குறைக்கணுமா? இந்த மேஜிக் பானத்தை குடிச்சா போதும்!!

Cumin Water as Weight Loss Drink: சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். அவற்றில் ஒன்றான ஒரு மேஜிக் பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 29, 2022, 06:35 PM IST
  • தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
  • சீரக நீரை குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்
  • சீரக தண்ணீரை தயாரிப்பது எப்படி?
தொப்பையை குறைக்கணுமா? இந்த மேஜிக் பானத்தை குடிச்சா போதும்!! title=

எடையைக் குறைக்கும் பானம்: இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பது அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனையாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்வதாலும், பலரது உடல் இயக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த பிரச்சனை கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் உடல் செயல்பாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்தால், அதை குறைப்பது மிக கடினம் என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டு விட்டார்கள். 

எனினும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். அவற்றில் ஒன்றான ஒரு மேஜிக் பானத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். இதை குடித்தால், மிக விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். இதை தயார் செய்யும் வழிமுறையும் மிக எளிதானது. 

தொப்பையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

வயிற்று கொழுப்பைக் குறைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனினும், அனைவரது வீட்டிலும் இருக்கும் சீரகம் இதில் உங்களுக்கு கை கொடுக்கும். இதை பயன்படுத்தி இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், அதிகரிக்கும் எடையைக் குறைக்க சீரகத் தண்ணீர் ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று கூறினார். இது உடல் கொழுப்புக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.

சீரக நீரை குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்

சீரகம் இல்லாமல் பல இந்திய உணவு வகைகளின் சுவை முழுமையடைவதில்லை. இதை சாப்பிடுவது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இதன் மூலம்  அனைத்து வயிற்று கோளாறுகளிலிருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீரில் கலோரி குறைவாக இருப்பதாலும், இது கொழுப்பைக் குறைக்க உதவுவதாலும், உடல் எடை குறைப்புக்கு இதை குடிப்பது நன்மை பயக்கும். சீரக நீரில் இரும்புச்சத்து மிக அதிகமாக காணப்படுவதோடு, உடலின் வீக்கத்தைக் குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக ‘NO’ சொல்ல வேண்டிய சில உணவுகள்! 

சீரக தண்ணீரை தயாரிப்பது எப்படி?

சீரக தண்ணீர் தயார் செய்ய, 2 தேக்கரண்டி சீரக விதைகளை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆறியதும் பருத்தி துணியால் வடிகட்டவும். பின், இந்த பானத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். தொடர்ந்து 2-3 வாரங்கள் குடித்து வந்தால் அதன் பலன் தெரியும்.

நீங்கள் விரும்பினால், சீரக விதைகளை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். சீரகப் பானத்தை எளிதில் தயார் செய்ய விரும்பினால், அதை அரைத்து பொடி செய்து, ஒரு ஸ்பூன் சீரகப் பொடியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். சாப்பிட்ட பிறகு இந்த பானத்தை குடித்தால், அதிக பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஷாம்பூவுக்கு பதிலாக இதை யூஸ் பண்ணி பாருங்க; முடி பளபளக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News