கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 839 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதிக்கு பிறகு மிகவும் அதிகபட்ச இறப்பாகும்.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தத் தொற்றுத் தொடங்கியதிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு புதிதாக தொற்றுகள் பதிவாகியுள்ளன.
எனவே, இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 11,08,087 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
Also Read | Corona Symptoms: மாறிய கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 839 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதிக்கு பிறகு மிகவும் அதிகபட்ச இறப்பாகும்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்தியா ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 839 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் COVID-19 காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 1,69,275 ஆக உள்ளது.
Also Read | நாடு முழுவதும் "NO MASK NO SERVICE" திட்டம் விரைவில் அமல் செய்யப்படும்!
கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்த கொரோனா என்னும்கொடிய நோய், சற்று பதுங்கி, தற்போது தீவிர வேகத்துடன் பாயத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,33,58,805 ஆக உயர்ந்துள்ளது, இதில் 1,20,81,443 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 90,584 நோயாளிகள் நேற்று குணமடைந்தனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, சனிக்கிழமை 14,12,047 கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டன, ஏப்ரல் 10ஆம் தேதி வரை மொத்தம் 25,66,26,850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், நாடு முழுவதும் 100 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் இந்தியா சாதனை பதிவு செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10,15,95,147 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ALSO READ | ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR