புதுடெல்லி: கடந்த பல மாதங்களாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு தொடரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த பெருந்தொற்றின் பாதிப்பு குறித்த அண்மைத் தகவல்கள் உங்களுக்காக..
- கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,32,60,775; இந்த பெருந்தொற்றால் உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 8,05,765; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,49,76,231
- கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,08,014. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,619.
- கனடாவின் ஆண்டாரியோ மாகாணத்தில் உட்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் மக்கள் ஒன்றுகூட புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு...
- இஸ்ரேலில் வெள்ளி முதல் மூன்று வார ஊரடங்கு தொடங்கியது
- வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும்.
- மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
- கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 67,23,933
2. இந்தியா - 52,14,677
3. பிரேசில் - 44,95,183
4. ரஷ்யா - 10,86,955
5. கொலம்பியா - 7,50,471
6. பெரு - 7,50,098
7. மெக்சிகோ - 6,88,954
8. தென்னாப்பிரிக்கா - 6,57,627
9. ஸ்பெயின் - 6,40,040
10. அர்ஜெண்டினா- 6,13,658