நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலேயே அத்தனைச் சத்துக்களும் நிரம்பியிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும், அதை மோசமடையச் செய்வதும் நமது உணவு பழக்க வழக்கங்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஓர் காய் முட்டைகோஸ். உணவாக இதை சாப்பிட்டாலும், இதன் நன்மைகள் என்ன என்பது அனைவருக்கும் தெரிவதில்லை. அதுமட்டுமல, அதை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை என்பதும் தெரியாது. முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் எனபதை தெரிந்துக் கொள்வோம்.
எடை குறைப்பு: அதிக பருமனானவர்கள், தங்கள் உடல் எடையைக் குறைக்க முட்டை கோஸ் ஜூஸ் குடிக்கலாம். இது நமது உள் உறுப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லது. குறைவான கலோரியே உள்ளதால் கொழுப்பும் சேராது.இதனால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.
Also Read | வெல்லத்திற்கு இளமைக்கும் சம்பந்தம் உள்ளதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!!
அல்சர்: குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, தொடர்ந்து காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, உட்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியை போக்க முட்டைகோஸ் ஜூஸ் உதவும். முட்டைகோஸ் ஜூஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.
புற்றுநோய்: நோய் குறித்த பயத்தை விட, அதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சிகிச்சை முறைகளை நினைத்து தான் பலருக்கும் பயமே வருகிறது. இன்று புற்றுநோய் என்பது பரவலாக அறியப்படுகிற நோயாக மாறிவிட்டது. முட்டைகோஸ் ஜூஸில் உள்ள சல்ஃப்போரபேன் மற்றும் ஐசோசியனேட் ஆகிய சத்துக்கள், உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் பாதுகாக்கும்.
காட்ராக்ட்: வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் புரை நோய் ஏற்படாமல் தவிர்க்க முட்டைகோஸ் ஜூஸ் குடிக்கலாம்.
சருமப் பிரச்சனைகள்: சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளி, மரு போன்றவற்றால் முகம் பொலிவிழக்கும். ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கும் முட்டைகோஸ் ஜூசை தொடர்ந்து குடித்து வந்தால் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
Also Read | COVID குணமானபிறகு உடல்நலனை மேம்படுத்தும் யோகாசனங்கள்
நோய் எதிர்ப்பு சக்தி: முட்டைகோஸ் ஜூஸில் உள்ள ஹிஸ்டிடின் என்ற சத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும்.
மூளை செயல்பாடுகள்: மூளை கொடுக்கும் சமிக்கைகளினால் தான் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது. முட்டைகோஸின் சாற்றில் இருக்கும் விட்டமின் கே மற்றும் ஆந்தோசியானின்ஸ், மூளையின் செயல்பாட்டை பராமரிக்கிறது.
வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் பிரச்சனை வராமல் தவிர்க்க, முட்டைகோஸ் ஜூஸ் குடிக்கலாம். முட்டைகோஸ் ஜூஸில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுக்காக்கிறது முட்டைகோஸ் ஜூஸ்.
Also Read | Health Tips: தாம்பத்திய வாழ்வை மேம்படுத்தும் சிவப்பு முள்ளங்கி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR