Benefits Of Brisk Walk: அதிகாலையில் எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், பல நன்மைகள் கிடைக்கும். சிலர் வேகமாக நடக்கிறார்கள், சிலர் மெதுவாக நடக்கிறார்கள். இருப்பினும், இந்த பதிவில் நாம் விறுவிறுப்பான நடைப்பயிற்சிப் பற்றி பேசுவோம். அதாவது, ஒரு நபர் ஒன்று அல்லது அரை மணி நேரம் வேகமாக நடப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என தெரிந்துகொள்ளலாம். விறுவிறுப்பான நடைப்பயிற்சியால் சில தீவிரமான உடல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைகின்றது.
ஆகையால்தான் தினமும் நடப்பது அவசியம் என கூறப்படுகின்றது. இவற்றைத் தவிரவும், வேகமான நடையால் இன்னும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. காலையில் அரை மணி நேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? எந்தெந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
1. அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தில் கட்டுப்பாடு:
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்பு இருப்பதாக புகார் இருந்தால், விறுவிறுப்பான நடை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடைபயிற்சியின் போது இரத்த நாளங்கள் திறக்க தொடங்கும். இதனுடன், இந்த இரத்த நாளங்களில் சிக்கியுள்ள கொலஸ்ட்ரால் துகள்களும் உருக ஆரம்பிக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டம் சரியாக இருப்பதோடு இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். ஆகையால்தான் காலையில் 30 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்ய முயற்சி செய்வது அவசியம் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.
மேலும் படிக்க | பாரம்பரிய ஆயில் புல்லிங்! காலையில் செய்வது சரியா? இல்லை இரவில் செய்யலாமா?
2. நுரையீரல் வலிமையாகும்:
நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கு, விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம் போன்றது. விறுவிறுப்பான நடைப்பயிற்சியின் மூலம், தூய காற்று நுரையீரலுக்குள் நுழைகிறது. அதன் பிறகு ஆக்ஸிஜன் சப்ளை மேம்படும். இதன் காரணமாக நுரையீரல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும். அதே சமயம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி மற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
3. நீரிழிவு நோயாளிகளுக்கு வேகமான நடைபயிற்சி:
நீரிழிவு நோயாளிகளுக்கு வேகமான நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், ஒரு மாதத்திற்கு தினமும் அரை மணி நேரம் வேகமாக நடந்தால், கணையத்தின் செயல்பாடு மேம்படும். மேலும், இதனால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. நடைப்பயிற்சியால் உடலின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
4. மூட்டு வலியில் நன்மை பயக்கும்:
மூட்டுகள் சம்பந்தமான நோய் ஏதேனும் இருந்தால், விறுவிறுப்பான நடைபயிற்சி இதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரை மணி நேரம் வேகமான வழக்கமான நடைபயிற்சி, மூட்டுகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மூட்டுகளின் நிலை மேம்படும். இதன் காரணமாக அதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி உடலின் எலும்புகளும் வலுவாகும்.
ஒரு நாளில் எவ்வளவு நடக்க வேண்டும்?
நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும். உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கவும், இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் விரும்பினால், நீங்கள் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் (ஸ்டெப்ஸ்) நடக்க வேண்டும். தினமும் நீங்கள் இப்படி செய்தால், உங்கள் ஆரோக்கியத்தில் பல ஆச்சரியமான பலன்கள் கிடைக்கும். அதன் பலன் சில வாரங்களில் தெரியும்.
நடைபயிற்சியின் மற்ற நன்மைகள்
நடைபயிற்சி உங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் விறைப்பு பிரச்சனை இல்லாமல் இருக்கும். இது தவிர இது நமது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ஆகையால் தினமும் நடைபயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக்கொண்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் உள்ளவங்க இதை கவனிக்கவும்: உங்களுக்கு இஞ்சி ரொம்ப முக்கியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ