நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா வேண்டாமா என்பது தொடர்பாக மிகப் பெரிய விவாதங்கள் எழுந்துள்ளன: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்க இனிப்புப் பொருட்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல், இனிப்பு சுவையுள்ள பழங்கள், உலர்ந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
பேரீச்சம்பழத்தில் அதிக அளவு இயற்கை சர்க்கரை இருப்பதால் மக்கள் இதை எச்சரிக்கையுடன் பயன்படுத்துகிறார்கள். பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழத்தை எச்சரிக்கையுடன் மற்றும் குறைந்த அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பேரீச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள்
100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள், 9 கிராம் நார்ச்சத்து, 1 முதல் 3 கிராம் புரதம் மற்றும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
அடர் பழுப்பு பேரிச்சம்பழங்களில் 100 கிராகில் 4.70 மி.கி. இரும்புசத்து உள்ளது. எனவே, இது இரத்த சோகைக்கு நல்லது, பேரீச்சம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள், ஐசோஃப்ளேவோன்கள், குர்குமின், ஐசோதியோசயனேட்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழத்தைத் தவிர்த்தால் இந்த நன்மைகள் அனைத்தையும் அவர்கள் இழப்பார்கள்.
சர்க்கரை நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாதா? உண்மை என்ன?
பேரீச்சம்பழத்தை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, இரத்த அழுத்தம் அல்லது உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே நேரத்தில், சில ஆய்வுகளின்படி, சில வகைகளின் பேரீச்சம்பழங்களை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். நீங்கள் சரியான வகையான பேரீச்சம்பழங்களை உட்கொண்டால், இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் படிக்க | கோடையில் பேரிச்சம்பழம்: சாப்பிடலாமா கூடாதா? பக்க விளைவுகள் ஏற்படுமா?
பேரிச்சம்பழங்களின் கிளைசெமிக் குறியீடு 42.8 முதல் 74.6 வரை இருக்கின்றன. GI 55 க்கும் குறைவான உணவுகளை சர்க்கரை நோயாளிகல் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. பேரீச்சம்பழங்கள் ஒரு நடுத்தர GI உணவாகும் என்பதால் இது இரத்த சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்தும். எனவே, முற்றிலுமாக பேரிச்சம்பழத்தை தவிக்க வேண்டியதில்லை.
சர்க்கரை நோயாளிகள் தினமும் எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிடலாம்?
இந்தியாவில் காணப்படும் பேரீச்சம்பழங்கள், நடுத்தர ஜிஐ அளவுள்ள உணவுகள் மற்றும் அதிக அளவு குளுக்கோஸை இரத்தத்தில் சேர அனுமதிக்காது. அதனால், ரத்த சர்க்கரை உள்ளவர்கள், தினசரி ஒன்று முதல் இரண்டு பேரீச்சம்பழங்களை சாப்பிடலாம். அதே நேரத்தில், உலர் பேரீச்சம்பழங்களாக இருந்தால் 3-4 அல்லது 30 கிராம் உட்கொள்ளலாம் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
இருப்பினும், உங்கள் உணவில் மாற்றம் செய்து பேரீச்சம்பழத்தை உட்கொள்ளத் தொடங்கும் முன், உங்கள் ஊட்டச்சத்து நிபுணர் அல்லது உணவியல் நிபுணரிடம் கலந்தாலோசித்து அவர்களின் ஆலோசனையின்படி பேரீச்சம்பழத்தை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
சந்தையில் இருந்து பேரீச்சம்பழம் வாங்கும் போது, எப்போதும் சாதாரண பேரீச்சம்பழங்களை வாங்கவும். சர்க்கரை பூசப்பட்ட அல்லது வேறு எதனுடன் கலந்த பேரிச்சம்பழங்களை உட்கொள்ள வேண்டாம்.
உடற்பயிற்சிக்கு முன் பேரீச்சம்பழம் சாப்பிடுங்கள். இந்த நேரத்தில் இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என்பதால், பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகமாகாது
பேரிச்சம்பழத்தை காலை அல்லது மாலையில் குட்டிப் பசியை அடக்க உண்ணலாம்.
பேரீச்சம்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரையின் இழப்பைத் தவிர்க்க, பேரீச்சம்பழத்துடன் வறுத்த வேர்க்கடலை, பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளையும் உட்கொள்ளலாம்.
மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ