வயதான காலத்தில் வெள்ளை முடி உண்டாவது இயற்கையானது. ஆனால் 30 வயதிலும் சிலநேரங்களில் 20 வயதிலும் வெள்ளை முடி இருந்தால் அது மோசமான மன உளைச்சலை உண்டாக்கிவிடும். இதற்கு முக்கிய காரணம் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே. வயதாகும் போது முடியின் ஒவ்வொரு இழையிலும் செலுத்தப்படும் நிறமியின் அளவு குறைகிறது அதனால் தான் அது சாம்பல் நிறமாகவும் இறுதியில் வெள்ளை நிறமாகவும் மாறுகிறது. முன்கூட்டியே உண்டாகும் வெள்ளை முடியை தடுப்பது எப்படி, அதை மீண்டும் கருப்பாக மாற்ற முடியுமா என்பதை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக நாம் வெள்ளை முடியை மறைக்க ரசாயன அடிப்படையிலான ஹேர் டையை பயன்படுத்துகிறோம், ஆனால் இது நன்மைகளுக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும், இது ட்ரை ஹேர் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால்தான் நீங்கள் இயற்கையான முறைகளைப் பயன்படுத்துவது முக்கியம், இதனால் நீங்கள் கருமையான முடியைப் பெறுவது மட்டுமல்லாமல், வலிமையையும் பிரகாசத்தையும் பெறுவீர்கள். எனவே நீங்கள் விரும்பிய முடிவை எவ்வாறு பெறுவது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி
1. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை முடியின் வேர்களில் மசாஜ் செய்து உலர்த்திய பின் ஷாம்பு கொண்டு கழுவவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும். முடியில் படிப்படியாக கருமை வர ஆரம்பிக்கும்.
2. நெல்லிக்காய் மற்றும் ரீத்தா
வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க நீங்கள் நெல்லிக்காய் மற்றும் ரீத்தாவைப் பயன்படுத்தலாம். இதற்கு நெல்லிக்காய் மற்றும் ரீத்தா பொடியை ஒரு இரும்பு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் தலைமுடியில் தடவி உலரும் வரை காத்திருக்கவும். இறுதியாக முடியை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும்.
3. வெங்காயச் சாறு
வெள்ளை முடியை கருப்பாக்க வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். எனவே வெங்காயத்தை மிக்ஸி கிரைண்டரில் அரைத்து சாறு எடுத்து தலையில் தடவவும். பின் காய்ந்ததும், ஷாம்பு கொண்டு கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ