அதிக கொலஸ்ட்ரால் - முக்கிய அறிகுறிகள்: மக்களின் மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாகவும், தவறான உணவு பழக்கவழக்கங்களாலும், பல வித குறைபாடுகள் மனித உடலை ஆட்கொள்கின்றன. இவற்றில் முக்கியமானது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதாகும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மிகவும் பொதுவானதாகி வருகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. மேலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயமும் அதிகரிக்கிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் உங்கள் கைகளில், குறிப்பாக நகங்களில் தோன்றும். இவற்றை கண்டிப்பாக புறக்கணிக்க கூடாது. கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உங்கள் கைகள், நகங்களில் காணப்படும் அறிகுறிகள் என்ன? இவற்றை கண்டவுடன் ஏன் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது நகங்கள் மற்றும் கைகளில் காணப்படும் அறிகுறிகள்:
மஞ்சள் நிற நகங்கள்:
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, உங்கள் நகங்களின் நிறம் மஞ்சளாக மாறும். இது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. இரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால், நகங்களின் நிறம் மஞ்சளாக மாறும், நகங்களில் விரிசல்கள் உருவாக ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி உங்கள் நகங்களின் வளர்ச்சியும் நின்றுவிடும். இந்த அறிகுறிகள் தோன்றினால், கண்டிப்பாக கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது நல்லதாகும்.
மேலும் படிக்க | இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்!
கைகளில் வலி
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், அது கைகளின் இரத்த நாளங்களை மூடக்கூடும். இதன் காரணமாக கைகளில் வலி தொடங்குகிறது. ஆகையால், உங்கள் கைகளில் வலி இருந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
கைகளில் கூச்சம்
உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் கைகளில் கூச்ச உணர்வு ஏற்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் காரணமாக, சரியான இரத்த ஓட்டம் அவ்வப்போது தடைபடுகிறது. இது கைகளில் கூச்சத்தை ஏற்படுத்தும். கைகளில் கூச்சம் ஏற்படுவது அதிக கொலஸ்ட்ராலுக்கான மிக முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்:
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, பல வித அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். மேலும், இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை புறக்கணிக்காமல்,. உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதும் அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? ஜாக்கிரதை!! கொலஸ்ட்ரால் அறிகுறியாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ