புதுடெல்லி: உடலில் அதிக கொழுப்பு சேர்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதிக கொழுப்பு, இதய நோய்கள் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கொழுப்பை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொலஸ்ட்ரால் என்பது நமது இரத்தத்தில் இருக்கும் ஒரு மெழுகுப் பொருள். ஆரோக்கியமான செல்களை உருவாக்க உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை என்றாலும். ஆரோக்கியமான இதயத்திற்கு, வழக்கமான கொலஸ்ட்ரால் அளவு 5 mmol/L அல்லது குறைவாக இருக்க வேண்டும்.
உங்கள் உடலின் எல்.டி.எல் "கெட்ட" கொழுப்பின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும்போது, அது உங்கள் தமனிகளின் சுவர்களில் குவிந்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடிய அழற்சி இரசாயனங்கள் உற்பத்தியை ஏற்படுத்தும். அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் எந்த அறிகுறிகளையும் காட்டாது என்பது கவலைக்குரியது.
மேலும் படிக்க | வெயிலால் சரும அழகில் பாதிப்பா: இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்க கவலை ஏன்
எனவே கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான பழக்கங்களைக் கடைப்பிடிப்பது நலல்து. அதற்கான டிப்ஸ் இவை...
புகைப்பிடிக்க கூடாது
புகைபிடித்தல் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், எச்டிஎல் கொலஸ்ட்ரால் குறைவதற்கும் காரணமாகிறது. இதன் விளைவாக, உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் காலப்போக்கில் வீக்கமடையலாம்.
அதோடு உங்கள் தமனிகளில் இரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படலாம். இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி புகைபிடிப்பதைத் தவிர்ப்பதாகும்.
டிரான்ஸ் கொழுப்பைத் தவிர்க்கவும், நிறைவுற்ற கொழுப்பைக் கட்டுப்படுத்தவும்
டிரான்ஸ் கொழுப்புகள் பொதுவாக கேக்குகள், குக்கீகள் போன்ற உணவுகளில் காணப்படுகின்றன. மறுபுறம், நிறைவுற்ற கொழுப்பு பொதுவாக சிவப்பு இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்களில் காணப்படுகிறது.
குறைந்த நிறைவுற்ற கொழுப்பை சாப்பிடுவது மற்றும் டிரான்ஸ் கொழுப்பைத் தவிர்ப்பது, "கெட்ட" கொழுப்பு என்றும் அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்டிஎல்) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
கரையக்கூடிய ஃபைபர்
உடலால் உறிஞ்சப்படும் கொலஸ்ட்ராலின் அளவு கரையக்கூடிய நார்ச்சத்து மூலம் குறைக்கப்படலாம். ஓட்ஸ், முளை கட்டிய பயறு வகைகள், ஆப்பிள் பேரிக்காய் ஆகியவை கரையக்கூடிய நார்ச்சத்து கொண்ட உணவுகளின் மூலங்கள் ஆகும்.
மேலும் படிக்க | தினசரி பீர் குடிச்சா குடலுக்கு நல்லது
எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
உடல் பருமன் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் உடல் எடையில் 5-10 சதவீதத்தை குறைப்பது கொலஸ்ட்ரால் அளவை இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே எடை இழப்பு பயணத்தைத் தொடங்குவது அவசியமானது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம்.
மருந்தைப் புறக்கணிக்காதீர்கள்
உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது மட்டுமே சிலருக்கு போதுமானதாக இருக்காது. தேவைப்பட்டால், மருத்துவரின் அறிவுறுத்தல்களின்படி, கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR