Arthritis: மூட்டு வலியை அதிகரிக்கும் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே!

மூட்டுவலி பிரச்சனையை தடுக்க, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 4, 2023, 03:06 PM IST
  • வாழ்க்கை முறை சீர்குலைவுகள் காரணமாக, மூட்டுவலி ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளது.
  • சில உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாதத்தின் வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கும்.
  • கீல்வாதத்தைத் தவிர்க்க என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.
Arthritis: மூட்டு வலியை அதிகரிக்கும் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே! title=

வாழ்க்கை முறை சீர்குலைவுகள் காரணமாக, மூட்டுவலி ஏற்படும் அபாயம் அதாவது Arthritis பிரச்சனை கணிசமாக அதிகரித்துள்ளது. கீல்வாதத்தின் நிலையில், வீக்கம் மற்றும் வலி பிரச்சனைகள் காரணமாக முழங்கால்கள் அல்லது மூட்டுகளில் வலி அதிரிக்கிறது. இதன் காரணமாக சாதாரணமாக நடப்பது கூட கடினமானதாக ஆகி விடுகிறது. கீல் வாதம் மற்றும் முடக்கு வாதம் தற்போது பெரும்பாலானோரை பாதித்துள்ளது. இளம் வயதினர் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.  முடக்கு வாதம் (RA) மற்றும் சொரியாடிக் ஆர்த்ரிடிஸ் ஆகிய பிரச்சனைகள் ஆட்டோ இம்யூன் நோய்களாகக் கருதப்படுகின்றன.

மூட்டுவலி பிரச்சனையை தடுக்க, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். சில உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாதத்தின் வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கும். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கண்டபடி சாப்பிட்டு தொடர்ந்தால், அது மூட்டுவலி உள்ளவர்களுக்கு, பிரச்சனைகள் தீவிரமடையும்.

மேலும் படிக்க | Cardiovascular Exercise: மாரடைப்பை தவிர்க்க வேண்டுமா... தினமும் ‘படியேறுங்க’!

கீல்வாதத்தைத் தவிர்க்க என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்

உணவில் உப்பு அளவை குறைக்க வேண்டும்

கீல்வாதத்தின் சிக்கல்களைத் தவிர்க்க, உணவில் உப்பின் அளவைக் குறைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆராய்ச்சியில், அதிக உப்பு பொருட்களை சாப்பிட்டால், மூட்டுவலி பிரச்சனைகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக சோடியம் உள்ள உணவை உட்கொள்வது கீல்வாதம் அழற்சி மற்றும் தன்னுடல் தாக்க நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 18,555 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக உப்பு உட்கொள்ளும் நபர்களுக்கு முடக்கு வாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்கஹால் உங்கள் சிக்கல்களை அதிகரிக்கலாம்

மது அருந்தினால், இந்த பழக்கம் மூட்டுவலி பிரச்சனைகளை அதிகரிக்கும். கீல்வாத தாக்குதல்களின் தீவிரத்தன்மை மது அருந்துபவர்களுக்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது கீல்வாதத்தின் ஒரு காரணியாகவும் அறியப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், மூட்டுவலி பிரச்சனையில் மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது. இது தவிர, மூட்டுவலி உள்ள நோயாளிகளுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த உணவுகள் இன்டர்லூகின்-6 (IL-6), C-ரியாக்டிவ் புரதம் (CRP) மற்றும் ஹோமோசைஸ்டீன் (5 நம்பகமான ஆதாரம், 6) போன்றவற்றின் அளவுகளை அதிகரிக்கலாம். இவை மூட்டு வலியை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News