மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது!

மருத்துவத்திற்கான நோபல் பரிசினை ஜேம்ஸ் பி. அல்லிசன் மற்றும் தஸ்கு ஹூன்ஜு பகிர்ந்துக்கொண்டனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2018, 03:51 PM IST
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது! title=

மருத்துவத்திற்கான நோபல் பரிசினை ஜேம்ஸ் பி. அல்லிசன் மற்றும் தஸ்கு ஹூன்ஜு பகிர்ந்துக்கொண்டனர்!

ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டின் மருத்துவம் (அ) உடலியல் பிரிவிற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜேம்ஸ் பி. அல்லிசன் மற்றும் தஸ்கு ஹூன்ஜு இந்த விருதினை பகிர்ந்துக்கொண்டனர்.

1948-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிறந்த ஜேம்ஸ் பி. அல்லிசன், டெக்ஸாஸ் பல்கலை கழகத்தில் பேராசிரியாராக பணியாற்றி வருகின்றார். 

1942-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் கியோட்டோ பகுதியில் பிறந்த தஸ்கு ஹூன்ஜு கியோட்டோ பல்கலை கழகத்தில் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

Trending News