Election Rally in TN: மார்ச் 28-ல் ஒரே மேடையில் ஸ்டாலின் தலைமையில் 14 தலைவர்கள் ஒன்றாக பிரச்சாரம்

தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 24, 2021, 03:00 PM IST
  • திமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சேலத்தில் மார்ச் 28 ஆம் தேதி.
  • இதுவரை வெளியிடப்பட்ட கருத்துகணிப்பு திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தகவல்.
  • தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை தர உள்ளனர்.
Election Rally in TN: மார்ச் 28-ல் ஒரே மேடையில் ஸ்டாலின் தலைமையில் 14 தலைவர்கள் ஒன்றாக பிரச்சாரம் title=

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (DMK President MK Stalin) தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சேலத்தில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர். 

தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரம் மட்டும் இருக்கிறது, அதாவது தமிழ் நாட்டில் நடைபெற்ற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு (TN Assembly Election 2021) அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெளியிடப்பட்ட கருத்துகணிப்பு (TN Assembly Election 2021 Opinion Poll) 2021 விவரங்களை பார்க்கும் போது திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ALSO READ | TN Elections 2021: பாம்பு மற்றும் பல்லியை விட விஷம் கொண்டவர் முதல்வர் பழனிசாமி: மு.க ஸ்டாலின் தாக்கு

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Rahul Gandhi) தமிழகம் மற்றும் கேரளாவில் வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அது பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (மார்ச் 24) கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். அதேநேரத்தில் பாஜகவின் முக்கியத் தலைவரான அமித் ஷாவும் கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

 

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தேசிய தலைவர்கள் தமிழகம் வருகை தர உள்ளனர். மார்ச் 28 ஆம் தேதி ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணைத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அதேபோல ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் (Amit Shah) பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News