UGC NET 2021 தேர்வு: மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு, NTA கூறியது என்ன? இங்கே காணலாம்!

UGC NET 2021 மே தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் சைக்கிளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் நடத்தப்படவிருந்தன. மே 2, 2021 முதல் தேர்வு நடத்தபட திட்டமிடப்பட்டிருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 04:45 PM IST
  • இந்தியாவில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் படலம் தொடர்கிறது.
  • தற்போது UGC NET 2021 தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • புதிய தேதிகள் பற்றிய அறிவிப்பு NTA மூலம் வெளியிடப்படும்.
UGC NET 2021 தேர்வு: மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு, NTA கூறியது என்ன? இங்கே காணலாம்! title=

UGC NET 2021 Updates: இந்தியாவில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் படலம் தொடர்கிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், JEE Main தேர்வுகள் ஆகியவை ஒத்திவைகக்ப்பட்டதைத் தொடர்ந்து தற்போது UGC NET 2021 தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டிசம்பர் மாதம் நடக்கவிருந்த UGC NET 2021 தேர்வுகள் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது, மே மாத தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த UGC NET 2021 மே மாத தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையான NTA அறிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மேற்கோளிட்டு கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தேர்வை ஒத்திவைக்க NTA-வுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. "கோவிட் 19 (COVID-19) தொற்றுநோய் மீண்டும் தீவிரம் அடைந்துவரும் நிலையில், தேர்வு எழுதுவோரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மனதில் கொண்டு, கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் அவர்கள் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு NTA-வை கேட்டுக்கொண்டுள்ளார்" என்று ட்வீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: JEE மெயின் தேர்வுகள் தள்ளிவைப்பு: தேசிய தேர்வு முகமை தகவல்

UGC NET 2021 மே தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் சைக்கிளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே மாதம் நடத்தப்படவிருந்தன. மே 2, 2021 முதல் தேர்வு நடத்தபட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், இது இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின் படி, தேர்வுக்கான புதிய தேதிகள், தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக NTA-வால் அறிவிக்கப்படும். அதாவது, ஜூன் 1 முதல் தேர்வு தொடங்குமானால், NTA மே 15 க்குள் அதற்கான அறிவிப்பை அளிக்கும். திருத்தப்பட்ட தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் UGC NET 2021 அட்மிட் கார்டுகளும் வெளியிடப்படும்.

தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்வுக்கான தேதி தொடர்பான சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு ugcnet.nta.nic.in மற்றும் nta.ac.in ஆகியவற்றை தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது, ​​பல மாநிலங்களில் ஊராங்கு (Lockdown) உள்ள நிலையில், பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ALSO READ: Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான 

செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News