UPSC Alert: ஐஏஎஸ் குடிமைப்பணி தேர்வுகள் எழுத தயாராகும் மாணவரா? நுழைவுத்தேர்வு அலர்ட்

UPSC Civil Services Exam: ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இன்று முக்கியமான நாள்... சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023க்கான அறிவிப்பு வெளியானது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2023, 05:07 PM IST
  • CSE தேர்வு 2023க்கான அறிவிப்பு வெளியானது
  • குடிமைப்பணி தேர்வுக்கான விண்ணப்பப்படிவம்
  • குடிமைப்பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கான செய்தி
UPSC Alert: ஐஏஎஸ் குடிமைப்பணி தேர்வுகள் எழுத தயாராகும் மாணவரா? நுழைவுத்தேர்வு அலர்ட் title=

UPSC CSE 2023 அறிவிப்பு: UPSC CSE தேர்வு 2023க்கான விண்ணப்பப் படிவம் வெளியானது...  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC தேர்வுக்கு தயாராகும் மற்றும் தேர்வில் பங்கேற்க விரும்பும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் பதிவு செய்வதற்கு, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பல விவரங்கள் மற்றும் ஆவணங்கள் தேவைப்படும். கோடிக்கணக்கான மக்களின் கனவான குடிமைப் பணி லட்சியத்தை நிறைவேற்ற, லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர்.

2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், இது தொடர்பான பல அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமானவை.

விண்ணப்பிக்க கடைசி தேதி 21 பிப்ரவரி 2023  
UPSC CSE PT தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21 பிப்ரவரி 2023 ஆகும். விண்ணப்பிக்க இன்னும் நிறைய நேரம் உள்ளது, ஆனால் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் கூடிய விரைவில் விண்ணப்பித்துவிட்டு, தேர்வுக்கு தயாராகலாம்.

மேலும் படிக்க | Budget 2023: சுகாதார துறையின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள்!

யுபிஎஸ்சி தேர்வு தேதிகள்

தேர்வு தேதிகளையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்தது. முதல்கட்ட நுழைவுத்தேர்வு (UPSC CSE Pre Exam 2023) மே 28 அன்று நடைபெறும். 

யுபிஎஸ்சி தகுதி அளவுகோல்கள்

UPSC CSE அறிவிப்பு 2023 இல் தகுதி அளவுகோல்கள், UPSC CSE 2023 படிவ தேதி, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, தேர்வு முறை மற்றும் பிற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. UPSC ஆனது CSE உடன் இணைந்து இந்திய வன சேவை (IFS) ப்ரிலிமினரி தேர்வு 2023க்கான அறிவிப்பையும் வெளியிடும்.

மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!

UPSC CSE 2023 அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் UPSC CSE பூர்வாங்கத் தேர்வுப் படிவத்தை நிரப்பலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21 கடைசி நாளாகும்.

யுபிஎஸ்சி 2023 முக்கிய நாட்கள்
UPSC CSE அறிவிப்பு வெளியான தேதி - 1 பிப்ரவரி 2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 21 பிப்ரவரி 2023
தேர்வு தேதி 28 மே 2023

மேலும் படிக்க | Budget 2023: சீரியஸா பேசியபோது திடீரென வந்த சிரிப்பலை... சமாளித்த நிர்மலா சீதாராமன் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News