இந்திய இரயில்வே ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு போக்குவரத்து ஆதாரமாக உள்ளது. போக்குவரத்தின் முதுகெலும்பாக இருக்கும் ரயில்வே, நாட்டின் மூலை முடுக்கில் உள்ள பல பகுதிகளையும், முக்கிய நகரங்களுடன் இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாதனமாக உள்ளது. பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே செய்து வருகிறது. இருப்பினும், ரயில்வே வழங்கும் பல சேவைகள் பல பயணிகளுக்கு தெரிவதில்லை. அதனால், அதனால் அவர்கள் முழுமையான பயன்களை பெற முடிவதில்லை. அந்த வகையில், மிகச் சிலருக்குத் தெரிந்த சேவைகளில் ஒன்று, சர்குலர் ஜர்னி டிக்கெட் சேவை. இந்திய ரயில்களில் புறப்பட்ட இடத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கிளம்பிய இடத்திற்கே வரும்படி பயணத்தைத் திட்டமிடும் பயணிகள் சர்க்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டுகளை பெற்று பயணடையலாம்.
இந்திய ரயில்வேயின் இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் சர்குலர் ஜர்னி டிக்கெட் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம். ரயில்வேயால் (Indian Railways) சர்குலர் ஜர்னி டிக்கெட் என்ற சிறப்பு டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம், 8 வெவ்வேறு நிலையங்களில் இருந்து ஒரு டிக்கெட்டில் 56 நாட்களுக்கு ரயில் பயணிகள் பயணம் செய்யலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் பல ரயில்களில் ஏறலாம். பொதுவாக, யாத்திரை அல்லது சுற்றுலா செல்லும் பயணிகள் ரயில்வேயின் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பெருமளவு கட்டணம் குறையும்
நீங்கள் வெவ்வேறு நிலையங்களில் இருந்து டிக்கெட் வாங்கினால், அதன் கட்டணம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அதற்கான கட்டணம் கூடுதல் கிலோமீட்டர் அடிப்படையில் இருல்லாமல், புதிய பயணத்திற்கான தொடக்க புள்ளியாக கணக்கிடப்பட்டு, அதிலிருந்து பயணிக்கும் கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும். ஆனால் சர்க்குலர் பயண டிக்கெட்டுகள் 'நீண்ட தூர பயணிக்கும் போது கிடைக்கும் குறைவான கட்டணங்களின்' நன்மையை வழங்குகின்றன, அவை வழக்கமான புள்ளி-க்கு-புள்ளி கட்டணத்தை விட மிகக் குறைவு. எந்த வகுப்பிலும் பயணம் செய்ய சர்க்குலர் பயண டிக்கெட்டுகளை வாங்கலாம்.
சர்க்குலர் பயண டிக்கெட்டின் எடுத்துக்காட்டு
நீங்கள் தெற்கு இரயில்வேயில் இருந்து கன்னியாகுமரியில் இருந்து புதுதில்லிக்கு ஒரு சர்க்குலர் பயண டிக்கெட் எடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், பிறகு உங்கள் பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும். இந்தப் பயணம் புதுதில்லி வரை சென்று மீண்டும் கன்னியாகுமரியில் முடிவடையும். கன்னியாகுமரியில் இருந்து சென்னை செண்ட்ரல் வழியாக, திருவனந்த புரம், உதக மண்டலம் பெங்களூரு, மைசூரு மும்பை, மதுரா ஆக்ரா என என எங்கு எங்கெல்லாம் செல்ல விரும்புகிறீர்களோ அந்த வழியாக சென்று மீண்டும் கன்யாகுமரிக்கு வரலாம்.
மேலும் படிக்க | Indian Railways: விரைவில் வருகிறது வந்தே பாரத் சாதாரண்... குறைந்த கட்டண ரயில் சேவை!
பெருமளவு கட்டணம் குறையும்
சுற்று பயண டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள்.
சுற்று பயண டிக்கெட்டின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்கள். சுற்று பயண டிக்கெட்டுகளை டிக்கெட் கவுண்டரில் இருந்து நேரடியாக வாங்க முடியாது. இதற்கு நீங்கள் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். சில முக்கிய நிலையங்களின் பிரதேச வணிக மேலாளர் அல்லது நிலைய மேலாளர்களுடன் உங்கள் பயணப் பாதை பற்றிய தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மதுரை, திருச்சி, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்களில் நேரடியாகச் சென்று ஆஃப் லைன் முறையில் டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்காக உள்ள விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் புறப்படும் நாளிலிருந்து எந்த ரயிலில் கிளம்புகிறீர்கள் எதுவரை செல்கிறீர்கள் அங்கிருந்து எந்த ரயிலுக்கு மாறுகிறீர்கள், பின்னர் எங்கெங்கு எந்த ரயிலில் எந்தெந்த நாளில் சென்று எப்பொழுது திரும்பி வருகிறீர்கள் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | தென்மாவட்டவாசிகளுக்கு குட் நியூஸ்.. உடுப்பி, மூகாம்பிகா செல்ல IRCTC டூர் பேக்கேஜ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ