New Year Gift 8th Pay Commission News: 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சார்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுக்குறித்து விவரங்களை விரிவாக பார்ப்போம். வரும் புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் காத்திருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது எட்டாவது ஊதியக் குழு சார்ந்த அறிவிப்பு.
மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18000-லிருந்து ரூ.51480 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எட்டாவது ஊதிய குழுவை கொண்டு வருவதற்கு மத்திய அரசு யோசித்து வருகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் ஃபிட்மென்ட் காரணி அதிகரிக்கும், சம்பளமும் தானாக உயரும்.
எட்டாத ஊதிய குழுவை மத்திய அரசு அறிவித்து, அது அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் 186% உயரும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு மத்தியில் இது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும்.
ஏழாவது ஊதியக் குழுவிலிருந்து எட்டாவது ஊதிய குழுவுக்கு மாறும் போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதேபோல ஃபிட்மென்ட் காரணி 2.86 ஆக மாற்றப்படும்போது இது சாத்தியமாகும்.
இதன் காரணமாக சுமார் ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி கிடைக்கும். இதன் மூலமாக மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். ஏனென்றால் ஓய்வூதியமும் 186% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ரூ.9,000 ஆக இருக்கக்கூடிய ஓய்வூதியம் ரூ.25,740 அதிகரிக்கப்படலாம். ஆனால் இதுவரையில் மத்திய அரசு தரப்பிலிருந்து இது சார்ந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எட்டாவது ஊதிய குழுவுக்கு தேசிய கூட்டு ஆலோசனை அமைப்பு கவுன்சில் (NC-JCM) 2024 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனது கோரிக்கையை அளித்துள்ளது. இது தொடர்பான கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் கூறுகின்றன்.
இப்போது அடுத்த சம்பள கமிஷன் குழுவான எட்டாவது ஊதிய குழு அமைக்கப்பட்டால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க - 8வது ஊதியக்குழு வருமா, வராதா? 186% ஊதிய உயர்வு கிடைக்குமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
மேலும் படிக்க - விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரலாம்? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ