Pongal Gift | பொங்கல் இலவச வேட்டி சேலைகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கும் தேதிகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Government Pongal Gift | பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் விநியோகிப்பது குறித்து கைத்தறி துறை முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தை 1 ஆம் தேதி பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இதனையொட்டி தமிழ்நாடு அரசு எப்போதும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச வேட்டி சேலை, பொங்கல் பரிசு தொகுப்பு, ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும். இந்த ஆண்டும் இந்த இவை அனைத்தும் வழங்கப்பட உள்ளது.
இருப்பினும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற வேண்டிய பொருட்கள் குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. கரும்பு, வெல்லம் உள்ளிட்டவைகளின் கொள்முதல் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்குள் இந்த பொருட்களின் கொள்முதல் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கும்.
அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படக்கூடிய ஆயிரம் ரூபாய் ரொக்கம் குறித்து தமிழ்நாடு அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. கடுமையான நிதி நெருக்கடியில் அரசு இருப்பதால் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுமா? என்ற கேள்வியும் மக்களிடையே இருக்கிறது. ஏனென்றால் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அண்மையில் பேசும்போது அரசு கஜானாவில் சமூகநலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான போதிய நிதி இல்லை.
இருப்பினும் இந்த திட்டங்களுக்காக நிதியை முதலமைச்சர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு தான் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழ மிக முக்கிய காரணமாக இருந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் நடைபெறுவதாக இருந்ததும், பணம் இல்லை என்பதாலேயே தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரம் கிடைத்தவுடன் விரைவில் அந்த அறிவிப்பும் வெளியாகும்.
இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறக்கூடிய இலவச வேட்டி சேலை குறித்த முக்கிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கும் வகையில், அவற்றை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
ஜனவரி 10 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி சேலைகளை விநியோகம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கைத்தறிதுறை கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்களில் 2025 பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்காக 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், வேட்டிகளும் அரசு கொள்முதல் செய்திருக்கிறது. அதனால், புத்தாண்டு தொடங்கியதும் இலவச வேட்டி சேலை விநியோகமும் தொடங்கிவிடும். பொங்கல் பண்டிக்கை முன்னதாக வேட்டி சேலைகள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனைத்து பயனாளிகளையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இலவச வேட்டி சேலைகள் விநியோகம் நடந்து முடிந்தவுடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் விநியோகம் தொடங்கும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலேயே பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிவிட்டது. அதனால் இந்த ஆண்டும் இதேநேரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பது தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.