Central Government Health Scheme: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. CGHS (மத்திய அரசின் சுகாதாரத் திட்டம்) குழுவில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் (HCOs) ஆகியவற்றிற்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நோயாளிகளின் புகார்களை நிவர்த்தி செய்வது மற்றும் சுகாதார சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை உறுதி செய்வது இந்த புதிய வழிகாட்டுதல்களின் நோக்கமாக இருக்கும்.
சமீப காலமாக, நோயாளிகளுக்கான கட்டண பில்லில் முறைகேடு, அதிக கட்டணம் வசூலிப்பது, சிகிச்சை அளிக்க மறுப்பது போன்ற புகார்கள் எழுந்துள்ளன. இந்த பிரச்னைகளை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
CGHS: புதிய வழிகாட்டுதல்கள் என்ன?
இந்திய அரசு, அனைத்து சுகாதார நிறுவனங்களுக்கும் (HCOs) இந்த விஷயங்களை பின்பற்றுவது கட்டாயம் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் என்ன? இதனால் மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) கிடைக்கக்குடிய நன்மை என்ன? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
- நோயாளிகளுக்கு சேவை மறுக்கப்படக்கூடாது
எந்தவொரு தகுதியான சிஜிஎச்எஸ் பயனாளிக்கும் (CGHS Beneficiary) சேவைகளை வழங்க சுகாதார நிறுவனங்கள் மறுக்க முடியாது.
- சிறப்பு சூழ்நிலைகளுக்கான ஆவணங்கள்
நோயாளி இறந்துவிட்டால் அல்லது கோமா நிலையில் இருந்தால், இறுதி பில்லில் பயனாளியின் உதவியாளரின் கையொப்பம் மற்றும் மொபைல் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
- தகவல் அளிப்பது அவசியம்
அனைத்து சுகாதார நிறுவனங்களும் (HCOs) பரிந்துரைக்கப்படாத வழக்குகள், அவசரகால சேர்க்கைகள் மற்றும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகளின் நேரடி சேர்க்கை பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட கூடுதல் இயக்குனருக்கு (AD) மின்னஞ்சல் மூலம் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்.
- சரியான நேரத்தில் தகவல் அளிப்பதன் முக்கியத்துவம்
சரியான நேரத்தில் தகவல் அளிக்கப்படாவிட்டால், நோயாளிகளின் சிகிச்சை கட்டண பில்களுக்கான ஒப்புதல் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம், அல்லது பில்கள் நிராகரிக்கப்படலாம்.
- படுக்கை வசதி மற்றும் வார்டு ஒதுக்கீடு
மருத்துவமனைகள் பல்வேறு வார்டுகளில் உள்ள படுக்கைகள் மற்றும் முக்கிய இடங்களில் ICU பற்றிய தகவல்களைக் காண்பிக்க வேண்டும். பயனாளிகள் அவர்களின் தகுதியான வார்டு பிரிவில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தகுதியை விட குறைந்த பிரிவில் ஒதுக்கீடு ஏற்றுக்கொள்ள முடியாதது.
- மருந்துச்சீட்டு மற்றும் மருந்துகளுக்கான விதிமுறைகள்
மருத்துவர்கள் மருந்துகளை பொதுவான பெயர்களிலும் பெரிய எழுத்துக்களிலும் எழுத வேண்டும்.
- மருந்துகளுக்கு CGHS ஒப்புதல்
CGHS வழங்கும் மருந்துகளை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிராகரிக்கப்பட்டால், மருந்துகளின் கொள்முதல் ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
- உள்வைப்புகள் மற்றும் சாதனங்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள்
CGHS விலையை விட அதிக விலையைத் தேர்ந்தெடுப்பது: பயனாளி CGHS விலையை விட அதிக விலையில் உள்வைப்பு (implant) அல்லது சாதனத்தைத் தேர்வுசெய்தால், எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த ஒப்புதல் பில்லுடன் இணைக்கப்பட வேண்டும்.
தகவல்களை காட்சிப்படுத்துதல்: அனைத்து மருத்துவமனைகளும் சுகாதார வசதி மையங்களும் முக்கியமான தகவல்களைக் காட்சிப்படுத்த வேண்டும். மருத்துவமனை முக்கிய இடங்களில் எம்பேனல்மென்ட் நிலை, கட்டணங்கள் மற்றும் நோடல் அதிகாரியின் விவரங்களைக் காட்ட வேண்டும்.
- உதவி மேசை அமைப்பு
ஒவ்வொரு மருத்துவமனையிலும் CGHS ஹெல்ப் டெஸ்க்/கியோஸ்க் அமைப்பது கட்டாயமாகும்.
- கார்டுகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது
பயனாளிகளின் CGHS கார்டுகளை மருத்துவமனைகள் பெற்றுக்கொள்வதோ, மருத்துவமனையிடம் கார்டுகளை வைத்துக்கொள்வதோ கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
- அதிக கட்டணம் வசூலிக்க தடை
CGHS நிர்ணயித்த தொகுப்பு கட்டணங்களை விட பயனாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
- போலி பில்லிங் மீது கடும் நடவடிக்கை
போலி பில் அல்லது போலி ஆவணங்களை சமர்பிப்பது நிதி மோசடியாக கருதப்படும். அப்படி செய்யும் அமைப்புகள், நபர்கள் மீது எப்ஐஆர் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வழிகாட்டுதல்களை மீறும் சந்தர்ப்பங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று CGHS குழுவில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார நிறுவனங்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதையும், பயனாளிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. அனைத்து மருத்துவமனைகளும் இந்த விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ