இனி வாட்சப் மூலம் வியாபாரம் செய்யலாம்! வரவிருக்கும் சூப்பரான அப்டேட்!

வாட்ஸ் அப்பின் "வணிக தேடல்" அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனர்கள் பயன்படுத்த முடியும்.    

Written by - RK Spark | Last Updated : Nov 21, 2022, 07:38 AM IST
  • வாட்சப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.
  • வணிக பயன்பாட்டிற்கான புதிய தேடலை கொண்டு வருகிறது.
  • விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது.
இனி வாட்சப் மூலம் வியாபாரம் செய்யலாம்! வரவிருக்கும் சூப்பரான அப்டேட்! title=

மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, சில நாடுகளில் வாட்ஸ்அப்பில் "வணிகத் தேடல்" என்கிற புதிய செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த அம்சத்தின் மூலமாக வாட்ஸ் அப் பயனர்கள் வாட்ஸ் அப் செயலியில் இருந்துகொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும்.  வாட்ஸ் அப்பின் இந்த வசதி கிடைப்பதால் இனிமேல் பயனர்கள் வணிகர்களின் இணையதளங்களை பக்கங்களையோ அல்லது அவர்களின் தொலைபேசி எண்ணையோ தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் இதுகுறித்து கூறுகையில் “மக்கள் வாட்ஸ்அப்பில் எளிதான வகையில் பல வேலைகளை செய்ய நாங்கள் விரும்புகிறோம், அதன் ஒரு பகுதியாக தான் வணிகங்களில் ஈடுபடுவதற்கான வழிகளை உருவாக்கியுள்ளோம்.  பிரேசிலில் உள்ள மில்லியன் கணக்கான வணிகங்கள் உரையாடலுக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தினாலும், கண்டுபிடிப்பதையோ அல்லது வியாபாரம் செய்வது போன்ற வசதிகளை நாங்கள் எளிதாக்கவில்லை என்று கூறினார்.  வாட்ஸ் அப்பின்  "வணிக தேடல்" அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனர்கள் பயன்படுத்த முடியும்.  ஆனால் இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனர்களுக்கு எப்போது இந்த வசதி கிடைக்கும் என்று நிறுவனம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இனிவரும் மாதங்களில் வாட்ஸ் அப்பின் இந்த அம்சத்தை புதிய நாடுகளில் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு

வாட்ஸ்அப்பில் வணிகங்களைத் தேடுவது மற்றும் வாங்குவதற்கான வழிமுறைகள்:

1) உங்கள் சாதனத்திலுள்ள வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.

2) சாட் ஐகானைத் தேர்ந்தெடுத்த பிறகு, "டிஸ்கவர்" என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் "பிஸினஸஸ் " என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

3) உங்கள் இருப்பிடத்தை எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்யவும்.

4) கன்டினியூ என்பதை க்ளிக் செய்து  உள்ளூர் வணிகங்களைப் பார்க்கலாம்.

5) உங்கள் இருப்பிடம் அல்லாமல் வேறொரு இடத்தையும் நீங்கள் மேப் மூலமாக தேர்வு செய்து வணிகர்களை பார்க்கலாம்.

6) இப்போது நீங்கள் தேடும் வணிகத்தை உள்ளிடவும்.

7) பட்டியலின் மேலே உள்ள பில்டர் சிப்பைத் டேப் செய்வதன் மூலம், உங்கள் தேடலை மேலும் சுருக்கலாம். வகை, இருப்பிடம், ஓபன் ஸ்டேட்டஸ் அல்லது கேட்டலாக் மூலம் வணிகங்களை பில்டர் செய்யலாம்.

8)  பிசினஸ் ப்ரோபைலை பார்க்க பிஸ்னஸ் ஆப்ஷனை டேப் செய்ய வேண்டும்.

9) இப்போது சாட் பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வணிகர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க | நம் ஆதார் கார்ட் மூலம் இதுவரை வாங்கிய சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News