பங்குச் சந்தையில் வரலாறு காணாத லாபத்தைக் கொடுத்த நிறுவனத்தைப் பற்றி சர்வதேச அளவில் பேசப்படுகிறது. நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் முதலீட்டாளர்களுக்கு 13,031 சதவிகிதம் லாபம் கொடுத்திருப்பது என்பது மிகவும் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிரது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்! பட்டியலிடப்பட்ட நாளில் நிறுவனத்தின் பங்குகள் 13000 சதவீதம் உயர்ந்தன.
Little-Known Chinese Stock, Addentax Group Corp, Plunges After Mystery 13,000% (130 times) Rally. https://t.co/cRgj9EZlaR
— Aryal Mukti (@iSDBR) September 1, 2022
பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பிறகு, முதலீட்டாளர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும், இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம், ஆனால் எந்த நிறுவனமும் பட்டியலிடப்பட்ட நாளில் முதலீட்டாளர்களுக்கு 13000 சதவிகிதம் லாபத்தைக் கொடுத்ததில்லை.
ஆனால், பட்டியலிடப்பட்ட நாளில் முதலீட்டாளர்களுக்கு 13,031 சதவீதம் லாபம் கொடுத்த பங்குகளைப் பற்றித் தெரியுமா? முதலீட்டாளர்களை ஒரே நாளில் பணக்காரர்களாக்கிய பங்குகள் இவை.
மேலும் படிக்க: அதிகார போதையில் இருக்கிறீர்கள் : கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எழுதிய கடிதம்
சீன நிறுவனம்
சீன நிறுவனம் Addentax Group Corp, இந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கே அதன் பங்குகளின் விலை உயர்வு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது புதன்கிழமையன்று அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதுமே அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை 13000 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தைக் கொடுத்தது.
பலமுறை வியாபாரத்தை நிறுத்த வேண்டியிருந்தது
அட்டென்டாக்ஸ் பங்குகளின் இந்த ஏற்றம் காரணமாக, சந்தையில் வர்த்தகம் பல முறை நிறுத்தப்பட்டது. சந்தையில் இந்த ஏற்றம் காரணமாக, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 20 பில்லியன் டாலர்களை எட்டியது. இது போன்ற நிகழ்வுகள் நடப்பது அரிதினும் அரிது என்றாலும், தொழில்துறையில் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பதை உணர்த்தும் பங்குச் சந்தை விளையாட்டு இது.
நிறுவனத்தின் வணிகம் என்ன?
Addentax நிறுவனம் ஆடை உற்பத்தி தொழிலை செய்கிறது. இது தவிர, தளவாட வணிகத்தையும் செய்கிறது.
மேலும் படிக்க | வாட்ஸ்அப் சிக்னல் மெசேஜிங் செயலிகள் ஒழுங்குபடுத்தப்படும்: ட்ராய்
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் செல்வம் அதிகரிப்பு
அட்டென்டாக்ஸின் பங்குகள் உயர்ந்த பிறகு, நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹாங் ஜிடா மற்றும் அவரது சகோதரர் ஹாங் ஷிவாங் ஆகியோரின் சொத்துகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன.
பங்குகளின் விலை உயர்வுக்குப் பிறகு, அவரது சொத்து $ 1.3 பில்லியன் ஆக அதிகரித்துள்ளது. தலைமை நிர்வாக அதிகாரி ஹாங் இந்த நிறுவனத்தில் 4.8 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அவரது சகோதரருக்கு 1.6 சதவீத பங்குகள் உள்ளன.
அத்தகைய ஏற்றம் இதற்கு முன்பு எங்கே காணப்பட்டது?
முதலீட்டாளர்களுக்கு கொள்ளை லாபத்தை அளித்த எட்டாவது நிறுவனம் இது. இதற்கு முன்பே, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்களான AMTD டிஜிட்டல் மற்றும் மேஜிக் எம்பயர் நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு பம்பர் ரிட்டர்ன்களை அளித்தன. இருப்பினும், அதன் பின்னர் பங்குகளின் ஏற்றம் மட்டுப்பட்டது.
மேலும் படிக்க | Insurance காப்பீட்டுத் தொகை செட்டிமெண்டில் பிரச்சனையா? சுலபமான தீர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ