அதிர்ச்சி செய்தி!! ஜனவரி 1 முதல் UPI பரிவர்த்தனை செய்ய முடியாது... ஐடி முடக்கப்படும்

UPI Transaction: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2023, 12:10 PM IST
  • செயலற்ற UPI ஐடிகள் முடக்கப்படும்.
  • அதன் விளைவு என்னவாக இருக்கும்?
  • ஐடி முடக்கப்படுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
அதிர்ச்சி செய்தி!! ஜனவரி 1 முதல் UPI பரிவர்த்தனை செய்ய முடியாது... ஐடி முடக்கப்படும் title=

UPI Transaction: புத்தாண்டு பிறக்கவுள்ளது. புத்தாண்டில் பல விதிகளில் மாற்றம் இருக்கும். நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஒரு முக்கிய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக UPI ஐடி மூலம் ஒரு பயனர் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது ஐடி முடக்கப்படும். 

செயலற்ற UPI ஐடிகளைத் முடக்குவதற்கான வழிமுறைகளை இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) வழங்கியுள்ளது. அதாவது, ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும். அதாவது ஜனவரி 1, 2024 முதல் அவரது பயன்படுத்தப்படாத ஐடி முடக்கப்பட்டுவிடும்.

அதன் விளைவு என்னவாக இருக்கும்? 

கூகுள் பே, ஃபோன்பே மற்றும் பேடிஎம் (Google Pay, PhonePe, Paytm) போன்ற தளங்கள் ஆன்லைனில் பணம் அனுப்ப UPI ஐடியைப் பயன்படுத்துகின்றன. இது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் ஒரு மொபைல் எண்ணுடன் பல UPI ஐடிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல ஐடிகள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. 

ஐடி முடக்கப்படுவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

உங்களின் பழைய செயலற்ற ஐடி முடக்கப்படுவதை தடுக்க, உங்கள் பழைய ஐடியை டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் செயல்படுத்த வேண்டும், அதாவது ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதை செய்ய அந்த UPI ஐடி மூலம் பணம் செலுத்தி அதைச் செயல்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | Indian Railways: ஹோட்டல் எல்லாம் தேவையில்லை.... 100 ரூபாயில் ரிடயரிங் ரூம் கிடைக்கும்..!

பழைய UPI ஐடி ஏன் மூடப்படுகிறது?

NPCI அறிக்கையின்படி, வாடிக்கையாளர்கள் பழைய UPI ஐடியை செயலிழக்கச் செய்யாமல், அதாவது டீஆக்டிவேட் செய்யாமல் புதிய மொபைலில் புதிய UPI ஐடியுடன் மொபைல் எண்ணை இணைக்கின்றனர். இந்த விஷயத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதாவது TRAI வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. NPCI இன் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து வங்கிகளும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் UPI ஐடியை செயலிழக்கச்செய்ய தொடங்கியுள்ளன. ஒருவர் ஒரு ஐடி -ஐ பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால், அந்த பழைய UPI ஐடி மூலம் மோசடி நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அதைத் தடுக்க NPCI மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய முறை

இதற்கிடையில், யுபிஐ மூலம் செய்யப்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும். இதன் கீழ் ஐயாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு புதிய எச்சரிக்கை முறைமையை அறிமுகப்படுத்தப்படும். இதில், ஒரு பயனரோ அல்லது வணிகரோ இந்த தொகையை விட அதிகமாக UPI மூலம் பணம் செலுத்தினால், அவருக்கு அழைப்பு அல்லது SMS மூலம் எச்சரிக்கை அனுப்பப்பட்டு இந்த பரிவர்த்தனையை சரிபார்க்கும்படி கேட்கப்படும். சரிபார்த்த பின்னரே கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் சமீபத்தில், Paytm, Phone-Pay மற்றும் Google-Pay போன்ற  பணம் செலுத்தும் வசதிகளை வழங்கும் அனைத்து வங்கிகள் மற்றும் ஆப்ஸ் நிறுவனங்களிடமும் வாடிக்கையாளர்களின் UPI கணக்கு நீண்ட காலமாக ட்யூவாக இருந்தாலோ, அதாவது கட்டப்படாமல் இருந்தாலோ, இதுவரை எந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது நீண்ட நாட்களாக செயலில் இல்லாத நிலையில் இருந்தாலோ, அத்தகைய கணக்குகளை வெரிஃபை செய்யும்படி கேட்டுக் கொண்டது. 

மேலும் படிக்க | EPF Claim நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? இவற்றை தவிர்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News