Budget 2024: நிலையான விலக்கு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் நடுத்தர வர்க்கத்தினர்!

எதிர்வரும் இடைக்கால பட்ஜெட் திட்டத்தில் ஸ்டாண்டர்ட் டிடெக்‌ஷன் என்னும் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. வருமான வரியில் கொடுக்கப்படும் நிலையான விலக்கு அளவில் கடைசித் திருத்தம் 2019 இல் இடைக்கால பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2024, 06:32 PM IST
  • சம்பளம் பெறும் ஊழியர்களின் பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்.
  • ஒரு தனிநபரின் சம்பள வருவாயின் சதவீத அளவில் நிலையான விலக்குகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு திருத்தம் முன்மொழியப்படலாம்.
  • இடைக்கால பட்ஜெட் 2024, பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Budget 2024: நிலையான விலக்கு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் நடுத்தர வர்க்கத்தினர்! title=

Union Budget 2024 Expectations: வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் 2024, பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வருமான வரியில் சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். எதிர்வரும் இடைக்கால பட்ஜெட் திட்டத்தில்  வருமான வரியில் நிவாரணம் கொடுக்கும் வகையில், ஸ்டாண்டர்ட் டிடெக்‌ஷன் என்னும் நிலையான விலக்கு அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. வருமான வரியில் கொடுக்கப்படும் நிலையான விலக்கு அளவில் கடைசியாக,  2019 இல் இடைக்கால பட்ஜெட்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டின் மிக சமீபத்திய பட்ஜெட்டில்,  புதிய வரி முறைக்கும் ஸ்டாண்டர்ட் டிடெக்‌ஷன் சலுகை கொடுக்கப்பட்டது. தற்போது, ரூ.50,000 நிலையான விலக்கு அனுமதிக்கப்படுகிறது.

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்

சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு நிலையான விலக்கு என்பது அனைவருக்கும் ஒரே அளவிலான வரி நிவாரணமாக செயல்படுகிறது. இது மொத்த வருடாந்திர சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் வரி சலுகைக்கான சம்பள தொகையைக் குறிக்கிறது. இதன் விளைவாக வரிப் பொறுப்பைக் குறைக்கிறது. உதாரணமாக, ஒரு தனிநபரின் ஆண்டு சம்பளம் ரூ.7,50,000 என்றால், ரூ.50,000 விலக்கு அளிக்கப்பட்டு, மீதமுள்ள தொகையின் அடிப்படையில் (ரூ. 7,00,000) வரி கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில், நிலையான விலக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கழிப்பதற்கு பதிலாக, ஒரு தனிநபரின் சம்பள வருவாயின் சதவீத அளவில் நிலையான விலக்குகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு திருத்தம் முன்மொழியப்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், இதன் மூலம் அனைத்து வேலை செய்யும் நபர்களுக்கும் நியாயமான மற்றும் சமமான பலன்களை உறுதி செய்கிறது. கடந்த ஆண்டு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய நேரடி வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோருக்கு வருமான வரி தள்ளுபடிக்கான வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தினார். அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. குடும்ப ஓய்வூதியத்திற்கு (Family Pension) 15,000 ரூபாய் விலக்கு அளிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

வருமான வரி சலுகைகள் குறித்து, முதலீட்டு ஆலோசகர்களான ஆனந்த் ரதி அட்வைசர்ஸ் லிமிடெட் (ARAL) ஒரு விரிவான மற்றும் பிரத்தியேக அறிக்கையை கொண்டு வந்தது, இது வீட்டு உபயோகத்தில் வரியின் தாக்கம் பற்றிய கண்ணோட்டத்தை அளிக்கிறது. இந்தியாவில் நுகர்வு முறைகளில் வரிவிதிப்பின் தாக்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை எடுத்துக்காட்டும் விரிவான நுண்ணறிவுகளை அறிக்கை பெரும்பாலும் உள்ளடக்கியது.

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்: வருமான வரி

ஆராய்ச்சி முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: 

1. வளர்ந்து வரும் நுகர்வோர் மக்கள் தொகை

இந்தியாவில் ~40% மக்கள்தொகை கொண்ட நகரங்களுடன் நகரமயமாக்கல் பெருமளவில் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அளிக்கும் வரிச்சலுகைகள், அவர்கள் செலவழிக்கும் திறன் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது நுகர்வோர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், பயணம் மற்றும் உணவிற்காகா அவர்கள் செலவழிக்கும் செலவினங்களை அதிகரிக்க வழிவகுக்கிறது, மொத்த நுகர்வு 2030 க்குள் ~ரூ 370 ட்ரில்லியன் என்ற அளவை  எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. வீட்டுச் சேமிப்பை அதிகரிப்பதன் மூலம் சாதகமான புள்ளிவிவரங்கள்

மொத்த டீமேட் 29% சிஏஜிஆர் வளர்ச்சியுடன் மூலதனச் சந்தைகளில் சில்லறைப் பங்கேற்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது, இணைய ஊடுருவலின் ஆதரவுடன், சொத்தை ஈட்டுவதில் முதலீடு செய்ய இளைஞர்களிடையே நிதி விழிப்புணர்வு அதிகரித்தது. இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் அளவு, 2022 நிதியாண்டில் 923 பில்லியன் வர்த்தகம் செய்யப்பட்ட அளவுகளில் சாதனை அளவுகளை எட்டியுள்ளது.

3. சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு நிலையான விலக்கு அதிகரிப்பு தேவை

மேம்படுத்தப்பட்ட நிலையான விலக்கு, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் உள்ள தனிநபர்களுக்கு வரி நிவாரணம் அளிக்கும். வரியை சேமிக்க பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகள் செய்ய இயலாத நிலையில் உள்ள வருமான பிரிவுகளின் மீதான வரி சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் அவர்கள் நிவாரணம் அளிக்கும்.

மேலும் படிக்க | Income Tax: சம்பளத்தில் ‘இந்த’ அலவென்ஸ்களுக்கு வரியே கிடையாது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News