SBI vs HDFC vs ICICI vs AXIS: எந்த வங்கி எஃப்டி கணக்குக்கு அதிக வட்டியை தருகிறது?

ஆர்பிஐ ரெப்போ விகிதங்களை உயர்த்திய பிறகு எஃப்டி-க்கு பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உயர்ந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 23, 2022, 07:49 AM IST
  • RBI ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்தது.
  • பல வங்கிகளும் வட்டியை உயர்த்தி வழங்கின.
  • பெரிய வங்கிகள் எஃப்டி கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்குகின்றன.
SBI vs HDFC vs ICICI vs AXIS: எந்த வங்கி எஃப்டி கணக்குக்கு அதிக வட்டியை தருகிறது? title=

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததிலிருந்து பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டு வருகிறது, தற்போது ஆர்பிஐ ரெப்போ விகிதங்களை நான்கு புள்ளிகள் உயர்த்தியுள்ளது, இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி பல்வேறு வங்கிகள் நிலையான வைப்புத்தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகின்றன.  பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும்போது இனிமேல் நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்லவிதத்தில் வட்டி விகிதம் வழங்கப்படும் என்று தெரிகிறது.  இப்போது எஃப்டி கணக்குகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்றவை எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகிறது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 2023ம் ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு லாட்டரி! சம்பளம் இரட்டிப்பாக்கப்படும் 

1) ஆக்சிஸ் வங்கி:

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு, ஆக்சிஸ் வங்கி 3.50% வட்டி விகிதத்தையும், 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 4% வட்டியையும் வழங்குகிறது.  61 நாட்கள் முதல் 6 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 4.50% வட்டியும், 6 மாதங்கள் முதல் 9 மாதங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 5.25% வட்டியும் கிடைக்கும்.  ஆக்சிஸ் வங்கி 9 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான எஃப்டிகளுக்கு 5.50% வட்டி விகிதத்தையும், 1 வருடம் முதல் 15 மாதங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 6.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.  15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 6.40% மற்றும் 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு ​​6.50% வழங்குகிறது மற்றும் 3 வருடங்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளும் 6.50% வழங்குகிறது.

2) ஹெச்டிஎஃப்சி வங்கி:

ஹெச்டிஎஃப்சி வங்கியானது 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு 3 முதல் 6.5% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5% முதல் 7% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி தனது இணையதளத்தில், 5 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுக்கு 5 காலத்திற்கு முன்பதிவு செய்ய விரும்பும் மூத்த குடிமக்களுக்கு 0.25% கூடுதல் பிரீமியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

3) எஸ்பிஐ வங்கி:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பொது மக்களுக்கு 3% முதல் 6.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.50% மற்றும் 6.90% வரையிலும் வட்டி விகிதத்தை வழங்குகிறது.  எஸ்பிஐ இணையதளத்தின்படி, எஸ்பிஐ ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் 1.00% அதிகமாக இருக்கும், 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மற்றும் வட்டி விகிதம் 0.50% இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4) ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கி நவம்பர் 16ம் தேதியன்று ரூ. 2 கோடிக்கு உட்பட்ட எஃப்டிகளுக்கு வட்டி விகிதங்களை அதிகரித்தது, வங்கி 30 பிபிஎஸ் வரையிலான தவணைக்கால வரம்பில் வட்டி விகிதங்களை உயர்த்தியது,  இதன் மூலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கணக்குகளுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது, பொது மக்களுக்கு 3% முதல் 6.60% வரையிலும், வயதானவர்களுக்கு 3.5% முதல் 7% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க | வாட்ஸ் ஆப் வழியாக ஆதார், பான் கார்டு பெறுவது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News