ஜாக்பாட் அப்டேட்: PPF, NSC, SSY, SCSS...சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம், அறிவிப்பு விரைவில்

Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 26, 2023, 04:06 PM IST
  • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்.
  • வட்டியில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு.
  • சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களை இங்கே காணலாம்.
ஜாக்பாட் அப்டேட்: PPF, NSC, SSY, SCSS...சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம், அறிவிப்பு விரைவில் title=

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்: சிறு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் திருத்தக்கூடும். தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், பிபிஎஃப் (PPF), என்எஸ்சி (NSC), கேவிபி (KVP) போன்றவை சில பிரசித்தி பெற்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் ஆகும். அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் நிர்ணயிக்கும்.

சிறு சேமிப்பு திட்டங்கள்:

சேமிப்பு என்பது அனைவருக்கும் மிக முக்கியமான பழக்கமாகும். நல்ல வருமானத்தை அளிக்கும் பாதுகாப்பான பல சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இவற்றில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த திட்டங்களின் மூலம் கடினமாக உழைத்து மக்கள் சேர்த்து வைத்த பணம் பாதுகாப்பாக இருப்பதோடு நல்ல வருமானத்தையும் ஈட்டித் தருகின்றது.

அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது. தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி, கேவிபி போன்றவை சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் தீர்மானிக்கும். இந்த வட்டி விகிதங்கள் அரசாங்கப் பத்திரங்களின் (G-Sec yields) வருவாயைப் பொறுத்தது. அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை என்றே நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் திருத்துகிறது. அடுத்த காலாண்டிற்கான வட்டி விகிதங்களை இந்த திருத்தம் தீர்மானிக்கிறது.

வட்டியில் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லை

சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் முந்தைய காலாண்டின் அரசுப் பத்திரங்களின் செயல்பாட்டைப் பொறுத்தது. 10 வருட அரசு பத்திரங்கள் 7 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை வருவாய் தருகின்றன. இது 7.1 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க விகிதம் 5 முதல் 6 சதவீதம் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சிறுசேமிப்பு திட்டத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை.

மேலும் படிக்க | குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் பெற... கூகுளின் ‘சில’ அசத்தல் அம்சங்கள்!

இதுதான் தற்போதைய வட்டி விகிதம்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதம் முதல் 8.2 சதவீதம் வரையிலான வரம்பைக் கொண்டுள்ளது. பிபிஎஃப்-க்கு அரசாங்கம் ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி செலுத்துகிறது. தற்போது சிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டி கிட்டத்தட்ட ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு (FD-க்கு) சமமாக உள்ளது. அரசாங்கம் கடைசியாக ஜூன் 30, 2023 அன்று சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியது. பின்னர் அரசாங்கம் ஒரு வருடம் மற்றும் 2 வருட தபால் அலுவலக FD மற்றும் 5 வருட RD (தொடர் வைப்புத்தொகை) மீதான வட்டியை அதிகரித்தது. செப்டம்பர் 2022 -க்குப் பிறகு நான்காவது முறையாக வட்டியை அரசாங்கம் மாற்றியது.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களை இங்கே காணலாம்: 

- 1 ஆண்டு அஞ்சல் அலுவலக FD: 6.9 சதவீதம்
- 2 ஆண்டு அஞ்சல் அலுவலக FD: 7 சதவீதம்
- 3 ஆண்டு அஞ்சல் அலுவலக FD: 7 சதவீதம்
- 5 ஆண்டு அஞ்சல் அலுவலக FD: 7.5 சதவீதம்
- 5 ஆண்டு RD (Post Office RD): 6.5 சதவீதம்
- தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC): 7.7 சதவீதம்
- கிசான் விகாஸ் பத்ரா (கேவிபி): 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சி அடையும்)
- பிபிஎஃப் - 7.1 சதவீதம்
- செல்வமகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா): 8.0 சதவீதம்
- மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 8.2 சதவீதம்
- மாதாந்திர வருமானத் திட்டம் (அஞ்சல் அலுவலக மாதாந்திரத் திட்டம்): 7.4 சதவீதம்

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: RBI ரெப்போ விகிதம் குறித்து வந்த பெரிய தகவல்... வட்டி விகிதங்களில் மாற்றம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News