நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக தலைவர், சுஷில் குமார் மோடி, "மீண்டும் மீண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வரப்படுமா என கேட்கப்படுகிறது. ஜி.எஸ்.டி வரி முறையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வரப்பட்டால், மாநிலங்களுக்கு 2 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு எற்படும் " என்றார்
எந்த மாநிலமும், அது காங்கிரஸ் (Congress) ஆட்சி செய்யும் மாநிலமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த அரசு உள்ள மாநிலமாக இருந்தாலும் சரி, 2 லட்சம் கோடி வருவாயை இழக்க எந்த மாநிலமும் தயாராக இல்லை, எனவே, சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டு வருவது அடுத்த 8-10 ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியிலிருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும், மொத்தம் ஆண்டுக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. " பொது வெளியில் அறிக்கைகளை வெளியிடுவது எளிதானது, ஆனால் ஜிஎஸ்டியை அமல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) போன்ற தைரியமான நடவடிக்கை எடுக்கும் உறுதி கொண்ட பிரதமர் தேவை" என்று சுஷில் மோடி சபையில் தெரிவித்தார்.
பெட்ரோலிய (Petrol) பொருட்கள் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்பட்டால், அவற்றின் மீது 28% வரி வசூலிக்கப்படும். ஏனென்றால், ஜிஎஸ்டி வரி முறையில் அதிகபட்ச வரி அளவு 28% ஆகும்.
"தற்போது, பெட்ரோலிய பொருட்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து 60% வரி வசூலிக்கப்படுகிறது. இதன் விளைவாக 2 லட்சம் கோடி முதல் 2.5 லட்சம் கோடி வரை (மத்திய மற்றும் மாநிலங்களுக்கு) பற்றாக்குறை ஏற்படும். பெட்ரோலிய பொருட்களுக்கு 28% வரி வசூலித்தால், தற்போது லிட்டருக்கு ₹ 60 ஆக உள்ள வரி ₹14 என்ற அளவில் இருக்கும், ”என்று அவர் கூறினார்
கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் பெட்ரோல் மற்றும் டீசலைக் கொண்டுவருவது குறித்த ஆலோசனையைப் பற்றி விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை, பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 17 பைசா குறைந்தது. டெல்லியில், பெட்ரோல் லிட்டருக்கு. ₹90.99 ஆகவும், டீசல் லிட்டருக்கு ₹81.30 என்ற விலையில் விற்கப்படுகிறது.
ALSO READ | தொடர்ந்து 24 நாட்களுக்கு மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலை இன்று குறைவு!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR