வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? வரம்பை மீறினால் சிக்கல்... ஜாக்கிரதை!!

Gold Storage Limit at Home: தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது, ஆனால் அதை வீட்டில் வைக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2024, 03:17 PM IST
  • வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும்?
  • தங்கம் தொடர்பான வரி விதிகள் என்ன?
  • டிஜிட்டல் தங்கம் தொடர்பான வரி விதிகள் என்ன?
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? வரம்பை மீறினால் சிக்கல்... ஜாக்கிரதை!! title=

Gold Storage Limit at Home: நகைகளாகவோ, காயின்களாகவோ அவ்வப்போது தங்கத்தை வாங்கி சேர்த்து வைக்கும் பழக்கம் பெரும்பாலான இந்தியர்களிடம் உள்ளது. தங்க ஆபரணங்கள், அழகு, செழுமை, சுபம் மற்றும் நமது அந்தஸ்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றன. மேலும் மக்கள் குழந்தைகளின் திருமணத்திற்காகவும் எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பாகவும் தங்கத்தை வாங்கி சேமித்து வைக்கிறார்கள். 

ஆனால் வீட்டில் தங்கத்தை வைத்திருக்க ஒரு வரம்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வீட்டில் தங்கத்தை வைத்திருந்தால், அதற்கான கணக்கு காட்ட வேண்டும், அதாவது, அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

தங்கத்தில் முதலீடு செய்வது நல்லது, ஆனால் அதை வீட்டில் வைக்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். வரம்பிற்கு மேல் தங்கம் வைத்திருந்தால், வருமான வரித் துறையிடம் (Income Tax Department) அதற்கான கணக்குக் கொடுக்க வேண்டும்.

சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தவிர்க்க, வீட்டில் வைத்திருக்கக்கூடிய தங்கத்தின் சரியான அளவைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) விதிகளின்படி, வருமானம் மற்றும் விலக்குகளைப் பெற, வருவாய் ஆதாரங்களுக்கு (விவசாய வருமானம், பரம்பரைப் பணம், வரம்பு வரை தங்கம் வாங்குதல்) வரி விதிக்கப்படுவதில்லை. வீட்டில் தங்கம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்தால், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போது வீட்டில் இருந்து தங்க நகைகளை எடுத்துச் செல்ல முடியாது.

இன்றைய நவீன காலத்தில் ஃபிசிக்கல் தங்கத்துடன் நம்மால் டிஜிட்டல் தங்கத்தையும் வாங்க முடியும். தங்கத்தை வைத்திருப்பதற்கான வரம்பு என்ன? அது தொடர்பான வரி விதிகள் என்ன? இவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்க முடியும்?

- திருமணமாகாத பெண் 250 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்.
- திருமணமாகாத ஆண் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க முடியும்.
- திருமணமான பெண் 500 கிராம் வரை தங்கத்தை வீட்டில் வைத்திருக்கலாம்.
- திருமணமான ஆணுக்கு வீட்டில் தங்கம் வைப்பதற்கான வரம்பு 100 கிராம் ஆகும்.

மேலும் படிக்க | இந்த திட்டத்தில் சேர்ந்தால் எல்லா வீட்டு மகராசியும் இனி கோடீஸ்வரி தான்! பெண்களே தெரிஞ்சுகோங்க

தங்கம் தொடர்பான வரி விதிகள் என்ன?

CBDT சுற்றறிக்கையின்படி, திருமணமாகாத மற்றும் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வைத்திருக்க முடியும். திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தையும், திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கத்தையும் ஃபிசிக்கல் வடிவில் வைத்திருக்கலாம்.

தங்கம் வாங்கிய 3 ஆண்டுகளுக்குள் விற்கப்பட்டால், அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரியை (Short-Term Capital Gain Tax) அரசாங்கம் விதிக்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தை விற்றால், நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-Term Capital Gain Tax) செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் தங்கம் தொடர்பான வரி விதிகள் என்ன?

ஃபிசிக்கல் தங்கத்துடன் ஒப்பிடுகையில் டிஜிட்டல் தங்கம் (Digital Gold) அதிக வருமானத்தை அளிக்கிறது. இது தவிர, டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு வரம்பு இல்லை. முதலீட்டாளர்கள் விரும்பினால், ஒரு நாளில் டிஜிட்டல் தங்கத்தை ரூ.2 லட்சம் வரை வாங்கலாம். டிஜிட்டல் தங்கத்திற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. எனினும், இதற்கு  20 சதவீதம் நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

தற்போது பலர் SGB எனப்படும் சோவரன் தங்கப் பத்திரத்தில் (Sovereign Gold Bond) முதலீடு செய்கிறார்கள். இது ஒரு தங்க முதலீட்டு திட்டமாகும். இதில், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 4 கிலோ தங்கத்தை முதலீடு செய்யலாம். இதில், ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இதில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது. SGB 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரி விலக்கு பெறுகிறது. SGB இல் GST செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜூன் மாதம் முதல் உயரப்போகும் கிரெடிட் கார்டு கட்டணங்கள்! புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News