Indian 2 : இந்தியன் 2 படத்தில் கமல் கேரக்டரின் வயது என்ன? கேட்டா ஆடிப்பாேவீங்க..!

Indian 2 Kamal Haasan Senapathy Age : இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதை தொடர்ந்து, இதன் டிரைலர் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2024, 01:27 PM IST
  • இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியானது
  • விதவிதமான கெட்-அப்பில் கமல்ஹாசன்
  • இந்தியன் தாத்தாவின் வயது என்ன?
Indian 2 : இந்தியன் 2 படத்தில் கமல் கேரக்டரின் வயது என்ன? கேட்டா ஆடிப்பாேவீங்க..! title=

Indian 2 Kamal Haasan Senapathy Age : ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில், கமல்ஹாசன் வயது முதிர்ந்தவரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. 

26 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது பாகம் :

1996ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் வெற்றி பெற்ற படம், இந்தியன். நம் நாட்டில் இருக்கும் லஞ்சம் கொடுக்கும் கலாச்சாரத்தையும், அதை சுற்றியிருக்கும் அரசியலையும் எதிர்க்கும் கதாப்பாத்திரத்தின் வழியே இப்படம் எடுக்கபட்டிருந்தது. இதில், கமல்ஹாசன் தந்தை சேனாபதியாகவும் மகன் சந்துரு கதாப்பாத்திரமாகவும் நடித்திருந்தார். படத்தின் இறுதியில், தன் மகனை தானே கொள்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். 

இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஷங்கர். ஆனால், படத்தின் கதை தயாராக இருந்ததே தவிர படத்தின் வேலைகளை தாெடங்குவதில் கடும் தாமதம் ஏற்பட்டது. படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய போதும், நிதி சிக்கல், படப்பிடிப்பில் விபத்து என 5 வருடங்களுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்டு உருவான படம் இந்தியன் 2. இந்த படத்தில், அதே ‘சேனாபதி’ கமல் மீண்டும் வருவது பாேலவும், “இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்” என்று கூறுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. 

சேனாபதியின் வயது..

இந்தியன் படத்தின் சேனாபதி கதாப்பாத்திரம் 1918ஆம் ஆண்டு பிறந்தது போல காண்பித்திருப்பர். அவர், சுதந்திர போராட்ட தியாகியாகவும் இருப்பார். 2026ஆம் ஆண்டு கணக்குப்படி பார்த்தால், அவருக்கு வயது 108 வயது. இது குறித்து, நேற்றைய டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தான் 140 அல்லது 120 வயது சேனாபதியாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் என்றும், ஆனால் சேனாபதியின் கதாப்பாத்திரத்தின் வயதை இயக்குநர்தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க | Indian 2 Trailer : பல கெட்-அப்பில் மாஸ் காட்டும் கமல்! இந்தியன் 2 டிரைலர் எப்படி?

வர்மக்கலை..

இந்தியன் 2 படத்தின் சேனாபதி கதாப்பாத்திரம் வர்மக்கலையில் கைதேர்ந்தவர் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல, உண்மையான வாழ்வில் சீனாவை சேர்ந்த ஒருவர் 120 வயதில் வர்மக்கலையில் கைத்தேர்ந்த ஒருவர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கதாப்பாத்திரத்தை அடிப்படையாக வைத்து கமலின் வயதை இந்தியன் 2 படத்தில் ஷங்கர் நியாயப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 

Kamal Haasan

இந்தியன் 2 படத்தின் டிரைலர்:

இந்தியன் 2 படத்தின் டிரைலர் நேற்று (ஜூன் 25) மாலை 7 மணிக்கு வெளியானது. இதில், விதவிதமாக கெட்-அப்களில் தோன்றும் கமல்ஹாசன், பறந்து பறந்து சண்டையிடுகிறார். இதை டிரைலரில் பார்த்த ரசிகர்கள் மெய் சிலிர்த்து போயிருக்கின்றனர்.

டிரைலர் நன்றாக இருப்பினும், ஒரு சில ரசிகர்கள் கதை அவுட்-ஆப்-டேட் போல இருப்பதாகவும், இந்த காலத்திற்கு ஏற்றது பாேல இல்லை என்றும் கூறி வருகின்றனர். முதல் இந்தியன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆஹா-ஓஹோ என வரவேற்பை பெறவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

ரிலீஸ் எப்போது?

இந்தியன் 2 திரைப்படம், அடுத்த மாதம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | இந்தியன் 2 ட்ரெய்லர் விமர்சனம்: ஷங்கரின் இந்தியன் தாத்தா பட்டையை கிளப்புவாரா? சொதப்புவாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News