திருமணமான இந்திய பெண்களுக்கு வேலை இல்லை!! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்

Foxconn: Foxconn நிர்வாகிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ப்பத்திற்கான சாத்தியம் போன்ற காரணங்களைக் காட்டி, திருமணமான பெண்களை பணியமர்த்தாமல் இருக்குமாறு இந்திய பணியமர்த்தல் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2024, 05:36 PM IST
  • திருமணமான பெண்களை பணியமர்த்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தல்.
  • ஃபாக்ஸ்கானில் பாரபட்சமான கொள்கைகள்.
  • பணியமர்த்தல் நடைமுறைகள் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மீது குற்றச்சாட்டுகள்.
திருமணமான இந்திய பெண்களுக்கு வேலை இல்லை!! சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் title=

ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் முக்கிய சப்ளையர் நிறுவனமான ஃபாக்ஸ்கான், இந்தியாவில் உள்ள அதன் முக்கிய ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்த மறுத்து வருகிறது. தென்னிந்தியாவில் உள்ள ஐபோன் தொழிற்சாலை (iPhone Factory) ஒன்றில் திருமணமான இரண்டு பெண்கள் வேலையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

திருமணமான பெண்களை பணியமர்த்த வேண்டாம்: அதிகாரிகள் அறிவுறுத்தல்

திருமணமான பெண்களுக்கு எதிரான நிறுவனத்தின் இந்த நிலைப்பாடு சர்ச்சையை கிளப்பியுள்ளது. Foxconn நிர்வாகிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கர்ப்பத்திற்கான சாத்திம் போன்ற காரணங்களைக் காட்டி, திருமணமான பெண்களை பணியமர்த்தாமல் இருக்குமாறு இந்திய பணியமர்த்தல் நிறுவனங்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளனர். சில ஹயரிங் ஏஜென்சிகள், வேலைக்கு விண்ணப்பித்த திருமணமான பெண்கள், தங்கள் திருமண நிலையை மறைத்து வேலைகளைப் பெறுவதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பார்வதி மற்றும் ஜானகி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய சகோதரிகள் இந்த பாகுபாட்டை தனிப்பட்ட முறையில் அனுபவித்தனர். மார்ச் 2023 இல், வாட்ஸ்அப்பில் வேலை இடுகைகளைப் பார்த்த பிறகு அவர்கள் வேலை தேடி அந்த ஆலைக்குச் சென்றனர். 

பார்வதியும் ஜானகியும் ஃபாக்ஸ்கான் வளாகத்திற்கு வந்தபோது, ​​​​ஒரு காவலாளி அவர்கள் இருவரும் திருமணமானவர்களா என்று அவர்களிடம் கேட்டுள்ளார். “நாங்கள் இருவரும் திருமணமானவர்கள் என்பதால் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை” என்று பார்வதி கூறினார். மேலும், அவர்களை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரும், அந்த நிறுவனத்தில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்துவதில்லை என்று கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியமர்த்தல் நடைமுறைகள் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மீது குற்றச்சாட்டுகள்

முன்னதாக, இந்தியாவில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் பணிபுரிய திருமணமான பெண்களை ஃபாக்ஸ்கான் நிராகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவர்களின் பாரம்பரிய உலோக ஆபரணங்கள் உற்பத்தி செயல்முறையில் தலையிடலாம் மற்றும் ஐபோன் கூறுகளை சேதப்படுத்தலாம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், திருமணமான பெண்கள் தங்கள் ஆலைகளில் பணிபுரியும் போது இந்த ஆபரணங்களை அணிய அனுமதிக்கப்படுவதாகவும் நிறுவனம் கூறுகிறது.

Apple மற்றும் Foxconn: பணியமர்த்தல் செயல்முறை சிக்கல்கள்

2022 ஆம் ஆண்டில், ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் தங்கள் பணியமர்த்தல் செயல்பாட்டில் குறைபாடுகளை ஒப்புக்கொண்டன. ஆனால் 2023 மற்றும் 2024 இல் நடந்த சம்பவங்களை நிவர்த்தி செய்யவில்லை. இந்தியச் சட்டம் திருமண நிலையின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடுக்கவில்லை என்றாலும், ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் இரண்டும் அதற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ளன. "தொழில்துறையில் மிக உயர்ந்த சப்ளை செயின் தரநிலைகளை" நிலைநிறுத்துவதாக ஆப்பிள் கூறுகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் சில திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | திடீர் பணத்தேவையா? ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள்!

ஃபாக்ஸ்கானில் பாரபட்சமான கொள்கைகள்

Foxconn மற்றும் அதனுடன் இணைந்த ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களில் உள்ள பல ஆதாரங்கள் இந்த பாரபட்சமான கொள்கையை உறுதிப்படுத்துகின்றன. திருமணமான இந்துப் பெண்கள் அணியும் பாரம்பரிய நகைகளான மெட்டி, செயின், நெக்லஸ்கள் போன்றவை திருட்டு மற்றும் உற்பத்தியின் போது மின்னியல் வெளியேற்றத்தை ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கவலை தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. 

இந்தியாவில் ஐபோன் அசெம்பிளி ஆலையில் திருமணமான பெண்களை ஃபாக்ஸ்கான் தனது சாத்தியமான பணியாளர்களிலிருந்து விலக்கியது, நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு கொள்கைகள் மற்றும் பாலின பாகுபாடு பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஃபாக்ஸ்கான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் 2022 இல் தங்கள் பணியமர்த்தல் நடைமுறைகளை மேம்படுத்தியதாகக் கூறின. இருப்பினும், ராய்ட்டர்ஸ் விசாரணையில் இந்த பாரபட்சமான நடைமுறைகள் 2023 மற்றும் 2024 வரை தொடர்வது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News