ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை பிடிக்கப்போவது யார்?

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதும் அவரது இடத்தை ஷுப்மான் கில் நிரப்புவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jun 26, 2024, 01:34 PM IST
  • விரைவில் ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா.
  • அடுத்த ஆண்டு ஓய்வு பெற அதிக வாய்ப்பு.
  • 17 வருடங்களாக கிரிக்கெட் ஆடி வருகிறார்.
ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை பிடிக்கப்போவது யார்? title=

தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் உள்ளார். 2007 டி20 உலக கோப்பையில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறது. 2021க்கு பிறகு அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் இந்திய அணி பல தொடர்களை வென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன் சிப் இறுதி போட்டி, 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டி என ஐசிசி கோப்பைகளை தவறவிட்டுள்ளார் ரோஹித் சர்மா. தற்போது டி20 உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். சூப்பர் 8 போட்டிகள் முடிந்து தற்போது அரையிறுதி போட்டி தொடங்க உள்ளது. 37 வயதாகும் ரோஹித் சர்மாவிற்கு அணியில் அவரது இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை தோல்வி! ஓய்வை அறிவித்த முக்கிய ஆஸ்திரேலிய வீரர்!

ரோஹித் சர்மாவிற்கு பிறகு யார்?

டி20 உலக கோப்பை முடிந்த அடுத்த சில வாரங்களிலேயே இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதற்காக 18 பேர் கொண்ட இளம் இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது. இந்த அணிக்கு சுப்மான் கில் தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 30 வயதாகும் முகேஷ் குமார் தான் இந்த அணியில் உள்ள மிகவும் வயதான வீரர். ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பை என தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 18 பேர் கொண்ட அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இருந்த போதிலும் கில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளது.

எதிர்காலத்தை மனதில் வைத்து தான் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். தற்போது அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியை வழிநடத்தும் ரோஹித் சர்மா விரைவில் ஓய்வு பெற உள்ளதால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக கில் தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். " இளம் வீரரான சுப்மான் கில் நீண்ட காலத்திற்கு அணியில் விளையாட முடியும். அவர் தற்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் விளையாடுகிறார், கடந்த ஆண்டு அவர் ஒரு சிறந்த ஆட்டத்தை கொண்டிருந்தார். 2024 டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததால் அவர் சற்று துரதிர்ஷ்டவசமாக இருந்தார். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது சரியான முடிவுதான்.

நாளை ரோஹித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால், அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் கேப்டனாக இருப்பார். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்" என்று சேவாக் தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த கருத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவேர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய திவாரி, "சுப்மான் கில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது நல்ல பேட்டரை கேப்டனாக தேர்வு செய்கிறோம். முதலில் கேப்டனை தேர்வு செய்ய வேண்டும், பிறகு அவரைச் சுற்றி ஒரு அணியை உருவாக்க வேண்டும்” என்று திவாரி கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்த 7 பேர்... ஆனால் இந்திய அணியில் இடம் இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News